மீனவர் நலன்களைப் பாதுகாக்க உயர் அளவிலான செயற்குழு உருவாக்கப்படும்

மீனவர் நலன்களைப் பாதுகாக்க உயர் அளவிலான செயற்குழு உருவாக்கப்படும்

பாகான் டத்தோ, 05/03/2025 : நாட்டில் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைக் கையாளவும் அவர்களின் நலனைத் தொடர்ந்து பாதுகாக்கவும் HLC எனும் உயர் அளவிலான செயற்குழு, ஒன்று உருவாக்கப்படவிருக்கின்றது.

தாம் தலைமையேற்கவிருக்கும் அச்செயற்குழு, இதர ஐந்து அமைச்சுகளுடன் ஒருங்கிணைக்கப்படும் என்று துணை பிரதமர்  டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

விவசாய மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு- KPKM, நிதி அமைச்சு, உள்துறை அமைச்சு, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாடு அமைச்சர், பொருளாதார அமைச்சு ஆகியவை இதில் இடம்பெற்றுள்ள அமைச்சுகளாகும் என்று சாஹிட் ஹமிடி கூறினார்.

HLC தொடங்குவதற்கான பரிந்துரை வரும் வெள்ளிக்கிழமை அமைச்சரவைக்குக் கொண்டுச் செல்லப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

“ஐந்து மண்டலங்களில் நடைபெற்ற சந்திப்பு கூட்டங்களில் தெரிவிக்கப்பட்ட சில பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண ஆகும். நிச்சயம், இப்பிரச்சனைகள் ஒன்றோடு ஒன்று மாறுபட்டவை. ஆனால், பெரும்பாலான பிரச்சனைகளுக்குத் தொடர்பு உள்ளது,” என்றார் அவர்.

இன்று, பேராக், பாகான் டத்தோவில், மேற்கு கடற்கரை மண்டல மீனவர்களுடனான சந்திப்புக் கூட்டத்தில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.

மேலும், மேற்கு கடற்கரை மண்டலத்தில் உள்ள 66 மீனவர்களுக்கு 720,000 ரிங்கிட் மதிப்பிலான மீன்பிடி உபகரண உதவிகளும் வழங்கப்பட்டுள்ளதாக சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

Source : Bernama

#KPKM
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews