DEFA ஒப்பந்தத்தின் பேச்சுவார்த்தைகள் இவ்வாண்டு இறுதிக்குள் முடிவு செய்யப்படும்

DEFA ஒப்பந்தத்தின் பேச்சுவார்த்தைகள் இவ்வாண்டு இறுதிக்குள் முடிவு செய்யப்படும்

கோலாலம்பூர், 05/03/2025 : DEFA எனப்படும் இலக்கவியல் பொருளாதார கட்டமைப்பு ஒப்பந்தத்தின் பேச்சுவார்த்தைகள், இவ்வாண்டு இறுதிக்குள் முடிவு செய்யப்படும்.

2025-ஆம் ஆண்டு ஆசியான் தலைமைத்துவத்தின் கீழ், பொருளாதார வெற்றிக்கு DEFA முன்னுரிமை வழங்கும் என்பதை முதலீடு, வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சு, MITI அடையாளம் கண்டுள்ளதாக அதன் துணை அமைச்சர், லியூ சின் தோங் தெரிவித்தார்.

ஆசியான் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் மலேசியா, 2025 ஆசியான் சமூக தொலைநோக்கின் கீழ், வட்டார பொருளாதார ஒருங்கிணைப்பின் முதன்மை நோக்கத்தை இயக்குவதிலும் பங்காற்றுவதாக லியூ கூறினார்.

DEFA பேச்சுவார்த்தை செயல்முறையைத் தொடங்க, மலேசியா இரண்டு முக்கிய அணுகுமுறைகளை வலியுறுத்தியது.

ஆசியான் உறுப்பு நாடுகளின் கொள்கைத் திறனை மேம்படுத்துவதற்கான திட்டம், முதல் அணுகுமுறையாகும் என்று லியூ எடுத்துரைத்தார்.

”இலக்கவியல் மயமாக்கலின் மிகவும் சிக்கலான மற்றும் அதிநவீன பகுதிகளுக்கு கவனம் செலுத்தப்படுகிறது. குறிப்பாக வர்த்தகச் சங்கிலியில் இலக்கவியல் தொழில்நுட்பப் பயன்பாடு மற்றும் வர்த்தக சங்கிலியில் தரவு நிர்வகிப்பு மற்றும் இணையப் பாதுகாப்பு ஆகும்,” என்றார் அவர்.

பொருளாதார சமூகத்தை உருவாக்குவதில் குறிப்பாக சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களில் ஆசியான் நடைமுறைப்படுத்தியதைப் போல, DEFA-வை நிலைகள் மற்றும் கட்டங்களாக செயல்படுத்துவது இரண்டாவது அணுகுமுறையாகும் என்று இன்று மக்களவையில் லியூ தெரிவித்தார்.

Source : Bernama

#DEFA
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews