கடந்தாண்டில் வனவிலங்கு தாக்குதல் குறித்து 337 புகார்கள் பதிவு

கடந்தாண்டில் வனவிலங்கு தாக்குதல் குறித்து 337 புகார்கள் பதிவு

கோலாலம்பூர், 05/03/2025 : கிளந்தான், குவா மூசாங்கில், வனவிலங்கு தாக்குதல் குறித்து கடந்தாண்டில் 337 புகார்களை வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்காக்கள் துறை, பெர்ஹிலிதான் பெற்றுள்ளது.

அந்த எண்ணிக்கையில், யானைகள் தொடர்பில் 218 மற்றும் புலிகள் தொடர்பில் 47 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இயற்கைவளம் மற்றும் இயற்கை நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் கூறினார்.

“என்.ஆர்.இ.எஸ் அமைச்சு, பெர்ஹிலிதான் வழி வனவிலங்கு மற்றும் மனிதர்களின் தாக்குதலை தீவிரமாக பார்க்கின்றது குறிப்பாக, குவா மூசாங், கிளந்தானில்,” என்றார் அவர்.

கிளந்தான், குவா மூசாங்யில், யானை மற்றும் புலியின் தாக்குதலினால் அப்பகுதியைச் சேர்ந்த பலர் பலியாகியிருப்பதால் அது தொடர்பில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து இன்று மக்களவையில், புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஙே கோ ஹாம் எழுப்பிய கேள்விக்கு நிக் நஸ்மி அவ்வாறு பதிலளித்தார்.

Source : Bernama

#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews