கோலாலம்பூர், 05/03/2025 : பிற மத சடங்குகளை அவமதித்ததற்காக, Era FM வானொலி அறிவிப்பாளர்கள் மூவர் உட்பட, அறுவர் இன்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் வாக்குமூலம் அளித்தனர்.
2 மணி நேரம் வாக்குமூலம் அளித்தப் பிறகு, மூன்று வானொலி அறிவிப்பாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் புக்கிட் அமான் வளாகத்திலிருந்து வெளியேறியது.
வாக்குமூலம் அளிக்க, அவர்கள் அனைவரும் காலை மணி 10.30-க்கு புக்கிட் அமான் வந்தனர்.
இரண்டு மணி நேரம் நடைபெற்ற விசாரணையை புக்கிட் அமானின் வகைப்படுத்தப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு, யு.எஸ்.ஜே.டி மேற்கொண்டது.
இச்சம்பவம் தொடர்பாக, நாடு முழுவதும் 44 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ ரசாருடின் ஹுசேன் கூறியிருந்தார்.
குற்றவியல் சட்டம் செக்ஷன் 298 உட்பட 1998-ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் செக்ஷன் 233-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.
நேற்று, தைப்பூசத்தை கேலி செய்து நபில் அஹ்மட், அசாட் ஜஸ்மின் மற்றும் ரடின் அமீர் எனும் அந்த மூன்று வானொலி அறிவிப்பாளர்கள் காணொளி பதிவேற்றம் செய்த நடவடிக்கை, நாடு முழுவதும் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியது.
அதை தொடர்ந்து, பொது மன்னிப்பு கேட்ட அந்த மூன்று அறிவிப்பாளர்களும் விசாரணை முடியும் வரை தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Source : Bernama
#EraFM
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews