2025-ஆம் ஆண்டு நாடாளுமன்ற சேவை சட்ட மசோதா நாளை மக்களவையில் தாக்கல் செய்யப்படும்

2025-ஆம் ஆண்டு நாடாளுமன்ற சேவை சட்ட மசோதா நாளை மக்களவையில் தாக்கல் செய்யப்படும்

புத்ராஜெயா, 03/03/2025 :  2025ஆம் ஆண்டு நாடாளுமன்ற சேவை சட்ட மசோதா, நாளை மக்களவையில், இரண்டாம் வாசிப்புக்காக தாக்கல் செய்யப்படும்.

இச்சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு, ஒப்புதல் கிடைத்த பின்னர், நாடாளுமன்றம் தனது கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றுவதில் சுதந்திரமாக செயல்படுவதற்கு வாய்ப்பளிப்பதன் வழி நாட்டின் ஜனநாயக அமைப்புக்கும் முதிர்ச்சியை அளிப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

”நாட்டின் ஜனநாயக செயல்முறையின் முதிர்ச்சியைப் பற்றிய ஒரு முடிவையும் இது வழங்குகிறது. மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேச்சு சுதந்திரத்தின் அடையாளமாகவும் இது கருதப்படுகிறது. இருப்பினும், ஒட்டுமொத்த பொது சேவை செயல்முறையுடன் இதை ஆழமாகப் பிணைக்க முடியாது”, என்று அவர் கூறினார்.

பொது சேவையைக் காட்டிலும் தனியொரு சேவையாக இருப்பதை குறிக்கவே, நாடாளுமன்ற சேவையை அமைப்பதை அந்த சட்ட மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி, மக்களவையில் முதல் வாசிப்புக்காக சமர்ப்பிக்கப்பட்டது.

Source : Bernama

#PMAnwar
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews

Comments are closed, but trackbacks and pingbacks are open.