உள்ளூர் வெள்ளை அரிசியின் விநியோகத்தை விரைவுபடுத்த கே.பி.கே.எம்-மிற்கு உத்தரவு

உள்ளூர் வெள்ளை அரிசியின் விநியோகத்தை விரைவுபடுத்த கே.பி.கே.எம்-மிற்கு உத்தரவு

கோலாலம்பூர், 03/03/2025 : சந்தையில் உள்ளூர் வெள்ளை அரிசியின் விநியோகத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை விரைவுபடுத்துமபடி, விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.

உள்ளூர் வெள்ளை அரிசியின் விநியோகத்தை மீட்டெடுப்பது தொடர்பான அண்மைய நிலவரங்கள் குறித்து, கே.பி.கே.எம் மக்களுக்கு அவ்வப்போது தெரிவிக்க வேண்டும் என்று பிரதமர் உத்தரவிட்டுள்ளதாகவும் பிரதமரின் மூத்த பத்திரிக்கைச் செயலாளர் துங்கு நஸ்ருல் அபைடா கூறினார்.

”இந்த விநியோகத்தின் மறுசீரமைப்பு படிப்படியாக செயல்படுத்தப்படுகிறது. உள்ளூர் வெள்ளை அரிசியின் விநியோகத்தை மீட்டெடுப்பது தொடர்பான தகவல்களை மக்களுக்கு தொடர்ந்து தெரிவிக்குமாறு அமைச்சுகளுக்கு அவர் அறிவுறுத்தினார்”, என்று அவர் கூறினார்.

இன்று, மலேசிய பிரதமர் அலுவலகம் மற்றும் அன்வார் இப்ராஹிமின் முகநூல் பக்கத்தில் நேரலையாக ஒளிப்பரப்பப்பட்ட, பிரதமர் அலுவலகத்தின் தினசரி விளக்கமளிப்பில், துங்கு நஸ்ருல் அதனைத் தெரிவித்தார்.

அரிசியின் கொள்முதல் விலை, உற்பத்தி செலவு மற்றும் உள்ளூர் வெள்ளை அரிசியின் அதிகபட்ச விலை ஆகிய உள்கட்டமைப்பு சிக்கல்களே, அதன் விநியோகத்தின் குறைபாட்டிற்கு காரணம் என்று BPT சிறப்பு நடவடிக்கை குழு கண்டறிந்துள்ளதாக, கே.பி.கே.எம் அறிவித்திருந்ததை, கடந்த சனிக்கிழமை ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

Source : Bernama

#LocalWhiteRicePrice
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews