கழக சீர்திருத்தத்தைத் தொடர அரசாங்கம் கடப்பாடு

கழக சீர்திருத்தத்தைத் தொடர அரசாங்கம் கடப்பாடு

புத்ராஜெயா, 03/03/2025 : நிதி மற்றும் பொது நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை உறுதி செய்யும் மாற்றங்களைச் செயல்படுத்துவதன் மூலம் கழக சீர்திருத்தத்தை தொடர, அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளது.

கடுமையான நிதி ஒழுக்கத்தை அமல்படுத்தக் கோரும் நிதிப் பொறுப்புச் சட்டம், FRA-வை தமது அமைச்சு அறிமுகப்படுத்தியதாக கூறிய நிதி அமைச்சருமான டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், அரசாங்கம் செய்த சில மாற்றங்களுக்கான உதாரணங்களையும் சுட்டிக் காட்டினார்.

”இது எளிமையானதாக தெரிகிறது, ஆனால் எளிமையானதல்ல. ஏனெனில், பற்றாக்குறை அல்லது வரவு செலவுத் திட்டம் தொடர்பாக நாங்கள் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் அமல்படுத்த வேண்டும். அமல்படுத்தப்படாவிட்டால் நாடாளுமன்றத்தில் விவாதித்து கருத்து தெரிவிக்கும் வகையில் மீண்டும் முன்வைக்கப்பட வேண்டும். எல்லா நாடுகளும் அதைச் செய்யத் தயாராக இல்லை. ஏனெனில், உண்மையான சீர்திருத்தங்களைச் செய்வதற்கு வலுவான அரசியல் உறுதியும் அர்ப்பணிப்பும் தேவை”, என்று அவர் கூறினார்.

இன்று, புத்ராஜெயாவில் நடைபெற்ற பிரதமர் துறை ஊழியர்களுடனான மாதாந்திர கூட்டத்தில் உரையாற்றியபோது பிரதமர் அவ்வாறு கூறினார்.

இதனிடையே, நிர்வாகத்தில் மாற்றங்கள் இருந்தாலும், குத்தகையாளர்களின் செயல்முறைகளும் நடைமுறைகளும் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட அரசாங்க கொள்முதல் சட்டத்தை அமல்படுத்துவதாகவும் அன்வார் குறிப்பிட்டார்.

Source : Bernama

#PMAnwar
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews

Comments are closed, but trackbacks and pingbacks are open.