கோலாலம்பூர், 02/03/2025 : இந்திய சமுதாயத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்த இவ்வாண்டில் பிப்ரவரி வரை, இரண்டே மாதங்களில் 30 கோடி ரிங்கிட்டை மடானி அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.
அதோடு, இவ்வாண்டு முழுவதும் மேலும் அதிகமான திட்டங்கள் வகுக்கப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும் என்று தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாடு துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
இவ்வாண்டு இதுவரை ஒதுக்கப்பட்ட 30 கோடி ரிங்கிட்டில், இந்திய உருமாற்றுப் பிரிவான மித்ராவிற்கு 10 கோடி ரிங்கிட், SPUMI எனப்படும் இந்திய தொழில்முனைவோர் கடனுதவி திட்டத்திற்கு 10 கோடி ரிங்கிட் மற்றும் BRIEF-i எனப்படும் BANK RAKYAT இந்திய தொழில்முனைவோர் நிதியளிப்பு திட்டத்திற்கு 10 கோடி ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
இரண்டே மாதங்கள் இந்நிதி விநியோகிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்தியர்களின் சமூக பொருளாதாரத்தை மேம்படுத்த பல புதிய முயற்சிகளை கையாள விருப்பதாக டத்தோ ஶ்ரீ ரமணன் கூறினார்.
அதன் தொடர்பில், தமது அமைச்சின் கீழ் உள்ள பல நிறுவனங்களுடனும் பேச்சு வார்த்தை மேற்கொள்ளப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தியர்களின் எதிர்பார்ப்பை புரிந்துக் கொள்ளும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அவ்வப்போது தம்மை தொடர்புக் கொண்டு அண்மையத் தகவல்களைப் பெற்றுக் கொள்வதாக ரமணன் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டைப் போல, இந்திய சமுதாய தலைவர்களுடன் ஒரு சந்திப்புக் கூட்டத்தையும் பிரதமர் நடந்தவுள்ளார்.
இந்நிலையில், வணக்கம் மடானி திட்டத்தின் மூலம் அரசாங்க திட்டங்கள் குறித்தத் தகவல்களை வழங்க இந்திய சமுதாயத்துடனான தங்கள் தரப்பு விளக்கமளிப்பு கூட்டம் ஒன்றை நடத்தவிருப்பதாக ரமணன் விவரித்தார்.
இன்று செபெராங் ஜெயாவில் நடைபெற்ற பினாங்கு இந்திய தொழில்முனைவோருடனான வணக்கம் மடானி சந்திப்புக் கூட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
தாம் எப்போதும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் முயற்சிகளில் குறிப்பாக இந்திய சமுதாயத்திற்கான விவகாரங்களில் கவனம் செலுத்தி வருவதாக கூறிய ரமணன், பொருளாதார பலமே இந்திய சமுதாய எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் என்றும் நம்பிக்கை கொண்டுள்ளார்.
Source : Bernama
#DatoSriRamanan
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews
Comments are closed, but trackbacks and pingbacks are open.