பேராக் மாநில மஇகா ஏற்பாடு செய்த” ஏம்ஸ்ட் நமது தேர்வு” முயற்சி மாபெரும் வெற்றி

பேராக் மாநில மஇகா ஏற்பாடு செய்த" ஏம்ஸ்ட் நமது தேர்வு" முயற்சி மாபெரும் வெற்றி

பேராக், 02/03/2025 : 01 மார்ச் 2025 அன்று பேராக் மாநில மஇகா ஏற்பாடு செய்த “ஏம்ஸ்ட் நமது தேர்வு” மிகப்பெரிய திட்டம் எதிர்பார்த்ததைவிட மாபெரும் வெற்றி கண்டது. “ஏம்ஸ்ட் நமது தேர்வு” மாபெரும் திட்டம் தேசிய மஇகா உதவித் தலைவரும் பேராக் மாநில மஇகா தொடர்புக் குழு தலைவருமான டான் ஸ்ரீ எம் இராமசாமி தலைமையில் மிகவும் சிறப்பான முறையில் மாபெரும் வெற்றியினை எட்டியது. இந்நிகழ்வில் சுமார் 1,121 மாணவர்களுடன் 487 பெற்றோர்களும் மற்றும் 250 நிகழ்வின் ஏற்பாட்டளர்களும் கலந்துக் கொண்டனர்.

“ஏம்ஸ்ட் நமது தேர்வு” எனும் உண்ணதமான சிந்தனைத் தோன்றிய கனமே நமது தேசிய மஇகா உதவித் தலைவரும் பேராக் மாநில மஇகா தொடர்புக் குழு தலைவருமான டான் ஸ்ரீ எம் இராமசாமி அவர்கள் தனது நிர்வாக குழுவினரின் ஆதரவுடன் கடந்த ஒரு மாத காலமாக இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர். இந்திகழ்வில் முறையே 1,121 மாணவர்கள் கலந்துக்கொள்வதை உறுதி செய்ய சில யுக்திகளை வகுத்த நமது டான் ஸ்ரீ மிகவும் நேர்த்தியாக நிகழ்வு நடப்பதை உறுதிசெய்தார். இந்நிகழ்வு தொடர்பான விவரங்கள் ஊடகங்கள் மூலமாக பரப்புவதிலும், பள்ளிகளைத் தொடர்பு கொள்வதன் வழி, தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விளக்கம் அளித்தல் மூலமாகவும் விவரங்களைக் கொண்டு சேர்த்தனர்.

இதனைத் தொடர்ந்து, ஏற்பாட்டு வேலைகளை துரிதப்படுத்த மாணவர்களின் பதிவுகளை இணையம் வாயிலாக பதிவு செய்வதை உறுதி செய்தனர். இவ்வாராக பதிவு செய்தலின் வழி மாணவர்களின் வருகை மற்றும் எண்ணிக்கை முறையே உறுதி செய்தனர்.இந்நிகழ்வோட்டம் நேர்த்தியாகவும் சிறப்பான முறையில் நடந்தேரவும் அனைத்துத் தொகுதி தலைவர்களும் ஏற்பாட்டு குழுவினரும் மேற்பார்வையிட்டு செயல்பட்டனர்.

இம்முயற்சியின் வழி, மாணவர்களும் பெற்றோர்களும் மஇகாவின் கல்விக்கூடமான ஏம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் அமைந்திருக்கும் அனைத்து கல்வித்துறைகளையும் அதன் வழி பெறப்படும் கல்வியினைப் பற்றியும் அறிந்து கொண்டனர். இந்த நிகழ்வின் வழி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்திய சமுதாயத்திற்கு மஇகா ஏம்ஸ்ட் பல்கலைகழகம் ஏற்படுத்தியுள்ள சலுகைகளைப் பற்றி அறிந்துக்கொள்ள ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

வருகைப்புரிந்த மாணவர்களுக்கு ஏம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் வழங்கக் கூடிய, சான்றிதழ் கல்வி, அடிப்படைக்கல்வி, பட்டையக்கல்வி, இயங்கலை கல்வி போன்ற வாய்ப்புகள் பற்றிய விவரங்களைத் தெரிந்தும் பகிர்ந்தும் கொண்டனர். இத்துடன் தொழில்திறன் கல்வி தொடர்பான விளக்கமும் வருகைப்புரிந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இதன் வழி மாணவர்கள் கைத்தொழில் கற்று வாழ்க்கையில் மேன்மை அடைய வாய்ப்பினை ஏற்படுத்தும் என்பதனை அறிந்தனர்.

தொடர்ந்து நமது தலைவர் டான் ஸ்ரீ எம் இராமசாமி அவர்கள் இந்திய சமுதாய மாணவர்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டும் வகையிலும் ஊக்கம் அளிக்கும் வகையில் சிறப்பான கருத்துகளைத் தனது உரையில் எடுத்துரைத்தார். அவரின் சிறப்புரையில் நமது இந்திய சமுதாயம் வாழ்வில் முன்னேற கல்வி ஒன்றே ஏணிப்படியாக இருப்பதை வலியுறுத்தினார்.

இன்று நடந்தேறிய நிகழ்வில் மாணவர்களும் பெற்றோர்களும் ஏம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள வாய்ப்பின் வழி கல்வியில் சிறந்து விளங்க ஊக்கம் அளிப்பதை தெளிவுப்பெற்றனர். இதன் வழி நிகழ்வின் நோக்கத்தினை அனைவரும் வெற்றிகரமாக அடைந்ததை டான் ஸ்ரீ அவர்கள் மகிழ்வுடன் தெரிவித்தார்.

#AIMST
#MIC
#MICPerak
#Entamizh
#MalaysiaNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineNews

Comments are closed, but trackbacks and pingbacks are open.