கோலாலம்பூர், 01/03/2025 : ஊழல் வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக இணைய செய்தித்தள நிருபர் ஒருவரை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்பிஆர்எம் நேற்றிரவு மணி 11 அளவில் சிலாங்கூர், ஷா ஆலமில் உள்ள தங்கும் விடுதியில் கைது செய்தது.
நிருபரான அவ்வாடவர், ஊழல் வழக்கு தொடர்பாகவே கைதானதாகவும், மாறாக, அந்நிய தொழிலாளர் கடத்தல் குறித்து அவர் எழுதிய செய்தியால் அல்ல என்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது, எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார்.
2009-ஆம் ஆண்டு எஸ்பிஆர்எம் சட்டம் செக்ஷன் 16-இன் கீழ் இன்று தொடங்கி நான்கு நாள்களுக்கு அந்நிருபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
தனது நிருபர் ஒருவர் எஸ்பிஆர்எம்-மில் கைது செய்யப்பட்டிருப்பதாக சம்பந்தப்பட்ட அந்தச் செய்தித்தளம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதோடு, அவரிடம் இருந்து 20,000 ரிங்கிட் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக அசாம் மேலும் கூறினார்.
சட்டவிரோதமாக தொழிலாளர்களைக் கடத்தும், அந்நிய தொழிலாளர் நிறுவனம் குறித்த கட்டுரைகளை வெளியிடாமல் இருக்கவும், பதிவேற்றம் செய்த செய்தியை அகற்றுவதற்கும் சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர் கையூட்டு கேட்டதாக சந்தேகிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் தொடர்ந்து விசாரணைக்கு நடைபெற்று வருவதாக அசாம் கூறினார்.
Source : Bernama
#SPRM
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews





