80 வீடுகளில் ஏற்பட்ட தீ; 669 குடியிருப்பாளர்கள் பாதிப்பு

80 வீடுகளில் ஏற்பட்ட தீ; 669 குடியிருப்பாளர்கள் பாதிப்பு

கோத்தா கினபாலு, 01/03/2025 : கோத்தா கினபாலு, லிகாஸ், கம்போங் செம்பாகாவில், இன்று அதிகாலை 80 வீடுகளை உள்ளடக்கி ஏற்பட்ட தீ விபத்தில், அப்பகுதியைச் சேர்ந்த 669 குடியிருப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தீச்சம்பவத்தில் 139 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள வேளையில், உயிர் சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை என லிந்தாஸ், தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் அகஸ்தாவியா ஜோ குவாஸி கூறினார்.

250 சதுர மீட்டர் பரப்பளவில் தீ பரவியதாக, அகஸ்தாவியா விவரித்தார்.

இச்சம்பவம் குறித்து காலை மணி 5.41க்கு தங்களுக்கு அவசர அழைப்பு கிடைத்ததாக அவர் கூறினார்.

காலை 7.32 மணிக்கு வெற்றிக்கரமாக தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்த வேளையில், தீயை முழுமையாக அணைக்கும் நடவடிக்கை இன்னும் தொடர்ந்து வருவதாக, சபா மாநில மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு துறை வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

Lintas தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த 11 உறுப்பினர்களும், கோத்தா கினபாலுவை தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த 16 மற்றும் தீயணைப்பு அதிகாரிகள் ஆகியோரின் உதவியுடன் அந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Source : Bernama

#FireAccident
#KotaKinabalu
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews

Comments are closed, but trackbacks and pingbacks are open.