மலேசிய சூப்பர் லீக் கிண்ணம்

மலேசிய சூப்பர் லீக் கிண்ணம்

கோலாலம்பூர், 27/02/2025 : மலேசிய சூப்பர் லீக் கிண்ண காற்பந்தாட்டம்.

நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் கூச்சிங் சிட்டி 3-0 என்ற கோல் எண்ணிகையில் கிளந்தான் யுனைடெட் அணியை வீழ்த்தியது.

அதன் மூன்று கோல்களையும் அடித்து கூச்சிங் சிட்டியின் இறக்குமதி ஆட்டக்காரர் ஜோர்டன் மின்தா, ஹெட்ரிக் சாதனை செய்தார்.

கிளந்தான், கோத்தா பாரு, ஐந்தாவது சுல்தான் முஹமட் அரங்கில் நடைபெற்ற இவ்வாட்டத்தில், கூச்சிங் சிட்டி சிறந்த ஆட்டத்திறனை வெளிப்படுத்த தொடங்கியது.

ஜோர்டன் மின்தா மூன்றாவது நிமிடத்திலேயே தமது முதல் கோலை அடித்து அணியை முன்னணி வகிக்க செய்தார்.

அதன் வெற்றியை அவ்வணி கொண்டாடி முடித்த அடுத்த மூன்று நிமிடங்களில், இரண்டாவது கோலையும் போட்டு ஜோர்டன் மின்தா அரங்கின் கவனம் ஈர்த்தார்.

2-0 என்ற நிலையில் முதல் பாதி ஆட்டம் முடிந்த வேளையில், இரண்டாம் பாதி ஆட்டத்தையும் கூச்சிங் சிட்டி ஆக்கிரமிக்கத் தொடங்கியது.

பின்னர், 59-வது நிமிடத்தில் மீண்டும் தமது மூன்றாவது கோலைப் போட்டு ஹாட்ரிக் சாதனையுடன் ஜோர்டன் மின்தா தமது அணியை வெற்றிப் பெறச் செய்தார்.

இதனிடையே, கோலாலம்பூர் செராஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கும் கே.எல் சிட்டி 2-1 என்ற கோல்களில் பிடிஆர்எம்மைத் தோற்கடித்தது.

முதல் பாதியின் 23 மற்றும் இரண்டாம் பாதியின் 50-வது நிமிடங்களில் அதன் இரு கோல்கள் போடப்பட்டன.

பிடிஆர்எம்–மின் ஒரே கோல், ஆட்டத்தின் இறுதியில் 93-வது நிமிடத்தில் அடிக்கப்பட்டது.

மற்றுமொரு நிலவரத்தில், இருமுறை தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்த நெகிரி செம்பிலான், நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கெடாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

சொந்த அரங்கில் விளையாடிய அவ்வணி நந்தகுமார் காளியப்பன் தலைமையில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இரு கோல்கள் அடித்த வேளையில், அதன் இரண்டாவது கோலை செல்வன் அன்பழகன் அடித்தார்.

Source : Bernama

#MalaysiaSuperLeague
#Football
#FootballInMalaysia
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews

Comments are closed, but trackbacks and pingbacks are open.