கோலாலம்பூர், 27/02/2025 : உள்நாட்டுச் சந்தையில் தேங்காய் விநியோகம் போதுமான அளவு இருப்பதை உறுதி செய்ய 661,761 தேங்காய்களை விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு இறக்குமதி செய்துள்ளது.
டெங்கிலிலுள்ள ஃபாமா எனப்படும் கூட்டரசு விவசாயப் பொருள் சந்தை வாரியத்தின் நடவடிக்கை மையம், செனாவாங் ஃபாமா நடவடிக்கை மையம் மற்றும் பேராக் மாநிலத்தின் சிம்பாங் பூலாய் ஃபாமா நடவடிக்கை மையம் அகிய இடங்களில் அந்த தேங்காய்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையின் வழி அமைச்சு குறிப்பிட்டிருந்தது.
நாட்டில் தேங்காய் விநியோகம் நிலைத்தன்மை பெறும் வரை இந்நடவடிக்கை தொடரும் என்று அமைச்சு குறிப்பிட்டது.
இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் இலங்கையிலிருந்து தேங்காய்கள் இறக்குமதி செய்யப்படுவதாகவும் அமைச்சு தெரிவித்தது.
தேங்காய் பற்றாக்குறைப் பிரச்சினைக்கு நீண்ட கால அடிப்படையில் தீர்வு காணும் முயற்சியாக தென்னை மறுநடவு மற்றும் 12-ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் புதிய நடவுத் திட்டங்களை அமல்படுத்தவிருப்பதாக, அதில் குறிப்பிட்டிருந்தது.
இதனிடையே, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கு ஏதுவாக மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் அடையாளம் காணப்பட்ட இடங்களில் தென்னை பயிரீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
Source : Bernama
#CoconutImport
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews