கோலாலம்பூர், 27/02/2025 : முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப்பின் முன்னாள் மூத்த அதிகாரிகள் நால்வர் மீதான விசாரணையின் ஒரு பகுதியாக, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான எட்டு நபர்களிடமிருந்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம் வாக்குமூலங்களைப் பதிவு செய்யும்.
விசாரணைக்கு உதவும் பொருட்டு அந்த எட்டு நபர்களும் இவ்வாரத்திற்குள் அழைக்கப்படுவர் என்று எஸ்.பி.ஆர்.எம் உயர் ஆணையர் டான் ஶ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார்.
விசாரணை தொடர்பாக கைப்பற்றப்பட்ட ஆவணங்களைப் பயங்கரவாதம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் பணம் பெறும் சட்டம், அம்லா, தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அசாம் விவரித்தார்.
அந்த ஆவணங்கள் ஆய்வு செய்யப்படும் நிலையில், 2009-ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம் சட்டத்திற்கு மட்டுமே இவ்விசாரணை உட்பட்டதில்லை.
2001-ஆம் ஆண்டு பணமோசடி எதிர்ப்பு, பயங்கரவாத நிதியுதவி எதிர்ப்பு மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் கிடைக்கும் வருமானச் சட்டத்தின் கீழும் இவ்வழக்கு விசாரிக்கப்படுவதாக அவர் மேலும் கூறினார்.
ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில், இஸ்மாயில் சப்ரிக்குத் தொடர்புடைய நான்கு அதிகாரிகள், வெள்ளிக்கிழமை தொடங்கி தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
Source : Bernama
#IsmailSabriYaakob
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#Malay
Comments are closed, but trackbacks and pingbacks are open.