தெஹ்ரான், 27/02/2025 : வர்த்தகம், முதலீடு, கல்வி, சுகாதாரம், ஆராய்ச்சி உட்பட இன்னும் பல துறைகளில் மலேசியாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை ஆராய்ந்து வலுப்படுத்த அவ்விரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.
எட்டாவது ஜே.சி.எம் எனப்படும் மலேசியா-ஈரான் கூட்டு ஆணையக் கூட்டத்திற்கு, தமது சகாவான செயட் அப்பாஸ் ஆராக்ச்சியுடன் இணைந்து தலைமையேற்ற போது இவ்விவகாரத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக, வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் தெரிவித்தார்.
கோலாலம்பூர், தெஹ்ரான் அரசாங்கங்கள் அவற்றின் வணிகங்கள் உட்பட இரு நாட்டு மக்களின் இருவழி உறவையும் வலுப்படுத்தவும் இக்கூட்டம் உதவும் என்று முஹமட் ஹசான் கூறினார்.
”அமெரிக்காவிடமிருந்து தடைகள் இருந்தாலும், அது ஒருதலைப்பட்சமான தடையாகும். அந்த அனுமதியிலிருந்து நாம் விலகிச் செல்ல முடியாது, இருதரப்பு உறவை முறித்துக் கொள்ளலாம். ஆராய்ச்சி, அறிவியல், தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் சுற்றுலா அம்சங்களில் (ஒத்துழைப்பை) எவ்வாறு அதிகரிப்பது என்பதை நாம் ஆராய வேண்டும். ஏனெனில் இந்த துறைகள் அனுமதிக்கு உட்படுத்தப்படவில்லை”, என்று அவர் கூறினார்.
கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி அக்குடியரசிற்கு மூன்று நாள்கள் அலுவல் பயணம் மேற்கொண்டிருக்கும் முஹமட், ஈரானில் உள்ள மலேசிய தூதரகத்துடன் சந்திப்பு நடத்தியப் பின்னர் பெர்னாமாவிடம் அத்தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
Source : Bernama
#MalaysiaIran
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews
Comments are closed, but trackbacks and pingbacks are open.