கோலாலம்பூர், 26/02/2025 : நாடாளுமன்றத்தில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு கண்காட்சியை, இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ பார்வையிட்டார்.செயற்கை நுண்ணறிவு கண்காட்சி கடந்த 2 தினங்களாக நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
மலேசிய மைக்ரோசொப்ட் நிறுவனம் இலக்கவியல் அமைச்சோடு இணைந்து, தேசிய செயற்கை நுண்ணறிவு அலுவலகம் மற்றும் அரசுசாரா இயக்கத்தின் ஒத்துழைப்போடு இந்தக் கண்காட்சியை நடத்தியது.
வரும் காலத்தில், 8லட்சம் மலேசியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சிகளை மைக்ரோசோப்ட் நிறுவனம், இலக்கவியல் அமைச்சோடு இணைந்து வழங்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
அதற்கு முன்பதாக, நாட்டின் முக்கியத் தலைவர்களுக்குச் செயற்கை நுண்ணறிவு விழிப்புணர்வும், அதனை அறிந்து, புரிந்து, மக்களுக்கு எடுத்தியம்பும் திறனை நாட்டுத் தலைவர்கள் கொண்டிருப்பது காலத்தின் கட்டாயம் ஆகும். ஆக, இந்த நோக்கத்திற்காக செயற்கை நுண்ணறிவு கண்காட்சி நாடாளுமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
செயற்கை நுண்ணறிவு திறனும் விழிப்புணர்வும் அனைத்துத் தட்டு மக்களையும் சென்றடைய வேண்டியது அவசியம். இல்லையேல் நாம் அனைவரும் இலக்கவியல் அசுர வளர்ச்சியில் பின்தங்கிவிடுவோம் என்பது நிதர்சன உண்மை.
இலக்கவியல் யுகம் ஏற்படுத்தும் பெரும் மாற்றத்தை எதிர்கொள்ள நாட்டிலுள்ள அனைவரும் தயாராய் இருக்க வேண்டும். அதற்கு அனைத்துத் தலைவர்களும்,இலக்கவியல் துறை வல்லுனர்களும் இலக்கவியல் அமைச்சோடு இணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகிறது.
இந்தக் கண்காட்சியில், மைக்ரோசொப்ட் நிறுவன உயர் அதிகாரி கணேஷ் குமார் சரளமான தமிழ்லில் செயற்கை நுண்ணரிவு பற்றிய முக்கிய விபரங்களை விளக்கினார். அதோடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இந்தக் கண்காட்சியில் கலந்து கொண்டு செயற்கை நுண்ணறிவு தொடர்பான விளக்கங்களைப் பெற்றுக் கொண்டனர்.
#GobindSinghDeo
#AIForMalaysiasFuture
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews
Comments are closed, but trackbacks and pingbacks are open.