புக்கிட் ஜாலில், 26/02/2025 : தேசிய ஹாக்கி அணியில் இருந்து ஃபைசல் சாரி விலகியது, நாட்டிற்கு பெரும் இழப்பு என்று தேசிய ஆடவர் ஹாக்கி அணியின் தலைமை பயிற்றுநர் சர்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அந்த திறமையான ஆட்டக்காரர் இல்லாமல், ஸ்பீடி டைகர்ஸ் அணி நம்பிக்கையுடன் முன்னேற வேண்டும் என்று அவர் கூறினார்.
கடந்த 15 ஆண்டுகளாக, தேசிய அணிக்கு விளையாடி வரும் 34 வயதான ஃபைசல் அவ்வணியில் இருந்து விலகவிருப்பதாகக் கடந்த ஆண்டு தொடங்கி கூறி வருகிறார்.
“அவர் கடந்தாண்டில் தமது முடிவை எடுத்து விட்டார். ஆனால், கடந்தாண்டில் அவர் விளையாட முயன்றார். எனினும், கடந்தாண்டில் கூட சீனாவில் இருந்து திரும்பியதும் அவர் ஓய்வு எடுக்க விரும்பினார். இறுதியாக, தேசிய லீக் போட்டிக்குப் பிறகு அவர் முடிவெடுப்பதாக இருந்தார். பின்னர், தேசிய லீக் போட்டிக்குப் பிறகு அவர் ஓய்வு பெறுவதற்கான முடிவை எடுத்தார். எனவே, நாங்கள் தொடர வேண்டும்,” என்று கூறினார்.
தேசிய அணியில் இருந்து விலகினாலும், திரெங்கானு அணியில் தொடர்ந்து விளையாடவிருப்பதாக ஃபைசல் தெரிவித்திருக்கிறார்.
மார்ச் 3-ஆம் தேதி தொடங்கி 30 விளையாட்டாளர்கள் பயிற்சியில் ஈடுபடவுள்ளதாகவும் சர்ஜித் சிங் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு முழுவதும் நான்கு முக்கியமான போட்டிகளை எதிர்கொள்வதால் ஸ்பீடி டைகர்ஸ் அணி பயிற்சிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
Source : Bernama
#FaizalSaari
#Football
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews
Comments are closed, but trackbacks and pingbacks are open.