மலேசிய ஊடக மன்ற சட்ட மசோதா இன்று மக்களவையில் அங்கீகரிக்கப்பட்டது

மலேசிய ஊடக மன்ற சட்ட மசோதா இன்று மக்களவையில் அங்கீகரிக்கப்பட்டது

கோலாலம்பூர், 26/02/2025 : 2024ஆம் ஆண்டு மலேசிய ஊடக மன்ற சட்ட மசோதா இன்று மக்களவையில் அங்கீகரிக்கப்பட்டது மலேசியாவில் ஊடக சுதந்திரத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

இச்சட்ட மசோதாவை உருவாக்குவதற்கான பரிந்துரை சுமார் 52 ஆண்டுகளுக்கு முன்னர், 1973ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட நிலையில் தற்போது அங்கீகரிக்கப்பட்டது ஊடக தொழில்துறைக்கு ஒரு வரலாற்றுப்பூர்வமிக்க தருணம் என்று அவர் குறிப்பிட்டார்.

”அமல்படுத்தப்பட்டப் பின்னர் தோற்றுநர் வாரியம் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலேசிய ஊடக மன்றம் இவ்வாண்டில் அல்லது இவ்வாண்டு மத்தியில் நாங்கள் உருவாக்குவோம். அதன் செயல்முறை அதிகம் உள்ளது. இது தொடக்கம் மட்டுமே. ஆனால், மலேசியாவில் ஊடக சுதந்திரத்திற்கு மிகப்பெரிய வெற்றி,” என்று ஃபஹ்மி தெரிவித்தார்.

நாடாளுமன்றக் கட்டிடத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அவ்வாறு கூறினார்.

Source : Bernama

#FahmiFadzil
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews

Comments are closed, but trackbacks and pingbacks are open.