எபோலா வைரஸ்:உலகம் முழுவதும் அவசரகாலம் பிரகடனம்

எபோலா வைரஸ்:உலகம் முழுவதும் அவசரகாலம் பிரகடனம்

ebola2

மேற்கு ஆப்பிரிக்காவில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எபோலா வைரஸ் தாக்குதலுக்குப் பலியாகியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சியெரா லியோன், லைபீரியாவைத் தொடர்ந்து மூன்றாவது ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவும் அவசரகாலத்தைப் பிரகடனம் செய்துள்ளது. இந்த வைரஸ் தாக்குதல் வேறு நாடுகளுக்கும் பரவும் அபாயம் இருப்பதால் உலக சுகாதார ஸ்தாபனம் உலகளாவிய அவசர நிலையைப் பிரகடனம் செய்துள்ளது.

இந்த அறிவிப்பானது, எபோலா வைரஸ் தொடர்ந்து பரவாமலிருக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதையே காட்டுகிறது.

அதன் ஒரு பகுதியாக உலக சுகாதார ஸ்தாபனம் எபோலா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மீது பயணக் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.