செலாங்கூர் மாநில முதலமைச்சர் தன் ஸ்ரீ காலிட் இப்ராஹிம் PKR முதல்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப் பட்டிருக்கிறது. இந்த நீக்கம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் PKR கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் டத்தோ Dr. தன் கீ குவோங் வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21.07.2014 அன்று டத்தோ ஸ்ரீ Dr. வன் ஹசீசா வன் இஸ்மாயில் அவர்களை செலங்கூர் மாநில முதலைச்சர் பதவிக்கு வேட்பாளராக கட்சி நியமனம் செய்ததை ஏற்றுக் கொள்ளாமல் 22.07.2014 தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முடியாது என பத்திரிக்கைகளுக்கு செய்தி வெளியிட்டார். இந்த ஒரு காரணமே அவரை கட்சியில் இருந்து நீக்க போதுமானதாக இருந்தாலும் PKR கட்சியின் உச்ச மன்ற குழு அவரை பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் நீக்கியதற்கு மேலும் சில காரணங்களை வெளியிட்டிருக்கிறது. லங்காட் 2 திட்டத்தை ஒத்தி வைக்குமாறு கூறிய பின்னும் அதை ஏற்காமல் திட்டத்தை செயல்படுத்தியது, செலாங்கூட் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர், எஸ்கோ, சபாநாயகர் மற்றும் முதலமைச்சரின் படிகளை ஏற்றவேண்டாமென கூறிய அறிவுரைகளை ஏற்காமல் அதிகப்படுத்தியது, கட்சியின் கொள்கைக்கு எதிரான கிடெக்ஷ் நெடுஞ்சாலை திட்டத்தை மறு ஆய்வு செய்ய வலியுறுத்திய பின்னும் அந்த திட்டத்தை செயல் படுத்தியது, இஸ்லாம் வங்கியில் அவருக்கு இருந்த 70 மில்லியன் கடன் பற்றிய குறிப்பு அழிக்கப்பட்டது சம்பந்தமாக விளக்கம் கேட்டபின்னும் விளக்கம் முழுமையான தர தவறியது ஆகிய காரணங்களுக்காக தன் ஸ்ரீ காலிட் இப்ராஹிம் PKR கட்சியில் இருந்தும் முதலமைச்சர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டதாக PKR கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவுன் தலைவர் டத்தோ Dr. தன் கீ குவோங் வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையில் தெர்விக்கப்பட்டுள்ளது.
PKR கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ Dr. வன் ஹசீசா வன் இஸ்மாயில் காலியாகவிருக்கும் செலாங்கூர் மாநில முதலமைச்சராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.