கோத்தா பாரு, 25/02/2025 : சுற்றுலா நிறுவனத்தின் நிர்வாகியான Hafizul Hawari-க்கு, செவ்வாய்க்கிழமை 14 ஆண்டுகள் ஆறு மாத சிறைத் தண்டனையும் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், சுடும் ஆயுதத்தை வைந்திருந்தது உட்பட ஏழு குற்றங்களுக்காக, கோத்தா பாரு செஷன்ஸ் நீதிமன்றம் அந்த தீர்ப்பை அளித்தது.
தம் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஹபிசுல் ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி சுல்கிப்ளி அப்லா அத்தண்டனையை வழங்கினார்.
வழக்கின் உண்மைகளை நீதிமன்றம் கவனத்தில் கொண்டு, ஹபிசுல் செய்த குற்றங்களை கடுமையாக கருதுவதாகவும், நீதிபதி தமது தீர்ப்பில் தெரிவித்திருந்தார்.
முதலாவது குற்றத்திற்காக ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ஆறு பிரம்படியும், இரண்டாவது மற்றும் மூன்றாவது குற்றங்களுக்கு தலா மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
4-கிலிருந்து ஆறாவது குற்றங்களுக்காக தலா ஆறு மாதங்கள் சிறைத் தண்டனையும், ஏழாவது குற்றத்திற்கு 12 மாதங்கள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி கைது செய்யப்பட்ட நாளிலிருந்து, ஏக காலத்தில் அச்சிறைத்தண்டனைகளை அனுபவிக்க உத்தரவிடப்பட்டது.
Source : Bernama
#PDRM
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews
Comments are closed, but trackbacks and pingbacks are open.