இஸ்மாயில் சப்ரியுடன் தொடர்புடைய அதிகாரிகள் தடுப்பு காவலிலிருந்து விடுவிக்கப்பட்டனர்

இஸ்மாயில் சப்ரியுடன் தொடர்புடைய அதிகாரிகள் தடுப்பு காவலிலிருந்து விடுவிக்கப்பட்டனர்

கோலாலம்பூர், 25 பிப்ரவரி (பெர்னாமா) — ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில், கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் மூன்று அதிகாரிகள், இன்று விடுவிக்கப்பட்டனர்.

வாக்குமூலங்களைப் பெற்றுக் கொண்டதோடு, அவர்களின் தடுப்பு காவல் அவகாசமும் இன்றுடன் நிறைவு பெற்றதால், அவர்கள் விடுவிக்கப்பட்டதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம் தெரிவித்தது.

பணம் அல்லது சொத்துக்களின் மதிப்பு உட்பட மற்ற விவகாரங்கள் கண்டறியப்படவில்லை என்றும், விசாரணைக்கு உதவ சில சாட்சிகள் அழைக்கப்படுவதையும் தாங்கள் நிராகரிக்கவில்லை என்று எஸ்.பி.ஆர்.எம் தெரிவித்தது.

எஸ்.பி.ஆர்.எம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக, பெர்னாமா தொடர்பு கொண்டபோது, அந்த ஆணைய வட்டாரம் உறுதிப்படுத்தியது.

ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில், இஸ்மாயில் சப்ரிக்கு தொடர்புடைய நான்கு அதிகாரிகள், வெள்ளிக்கிழமை தொடங்கி தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

அந்நால்வரில் ஒருவர், மூன்று நாட்கள் தடுப்பு காவலுக்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்பட்டார்.

2009-ஆம் ஆண்டு எஸ்.பி.ஆர்.எம் சட்டம் செக்‌ஷன் 16(a) மற்றும் 2001-ஆம் ஆண்டு பணமோசடி எதிர்ப்பு, பயங்கரவாத நிதியுதவி மற்றும் சட்டவிரோத நடவடிக்கை சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

Source : Bernama

#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews