ஜாலான் பார்லிமன், 25/02/2025 : இதர நாடுகளுடன் மலேசியா உறவைத் தொடர்ந்து வலுப்படுத்துவதாக டத்தோ ஶ்ரீ அன்வார் தெரிவித்துள்ளார்.
அதோடு, பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியிருக்கும் அமெரிக்காவின் தற்போதைய முடிவைக் கருத்தில் கொள்ளாமல் சில மாற்றங்களை மேற்கொண்டு பருவநிலை மாற்றத்தை மறுக்காததும் அதில் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
“உதாரணமாக, எரிசக்தி மற்றும் ஆற்றல் மாற்றம் உட்பட தீபகற்பத்தில் குறிப்பாக சரவாக்கில் நாம் பயன்படுத்தும் கொள்கை. நாங்கள் அதிரடியான மற்றும் விரைவான வழிமுறைகளை நாங்கள் தொடர்வோம். எனவே, ஆசியான் தலைவராக ஆசியானின் ஒருமித்த கருத்தில் மாற்றம் இல்லாததை நான் காண்கிறேன். அமெரிக்கக் கொள்கையில் நாம் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா? நாங்கள் அங்கு செல்வதற்கு மிகவும் ஆர்வமாக அதை நாங்கள் நினைக்கவில்லை. நாங்கள் எங்கள் நண்பர்களையும் நடப்பில் உள்ள இணைப்பையுமே பாதுகாக்கிறோம்”, என்று அவர் கூறினார்.
இன்று மக்களவையில், மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் எழுப்பியக் கூடுதல் கேள்விக்கு பிரதமர் அவ்வாறு பதிலளித்தார்.
மேற்கத்திய நாடுகள் குறிப்பாக அமெரிக்கா பருவநிலை மாற்றத்தை முக்கிய விவகாரமாக மீண்டும் அங்கீகரிப்பதை உறுதிசெய்ய ஆசியான் தலைவராக மலேசியாவின் பங்களிப்பு குறித்து சைட் சாடிக் முன்னதாக கேள்வி எழுப்பினார்.
Source : Bernama
#PMAnwar
#ForeignAffairs
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews
Comments are closed, but trackbacks and pingbacks are open.