ஜாலான் பார்லிமன், 25/02/2025 : மார்ச் முதலாம் தேதி தொடங்கி தீபகற்பம் முழுவதும் உதவித் தொகைப் பெற்ற உள்ளூர் வெள்ளை அரிசி, பத்து கிலோகிராம், 26 ரிங்கிட்டுக்கு விற்பனை செய்யப்படும்.
வறுமையில் இருக்கும் நான்கு லட்சம் குடும்பங்களை இலக்காகக் கொண்ட உள்ளூர் வெள்ளை அரிசி உதவித் தொகைத் திட்டத்தின் மூலம் அவை விற்பனை செய்யப்படும் என்று நெல் மற்றும் அரிசி கட்டுப்பாட்டு தலைமை இயக்குநர் டத்தோ பட்ரூல் ஹிஷாம் முஹ்மட் தெரிவித்தார்.
எதிர்வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஆறு மாத காலக்கட்டத்திற்கு இத்திட்டம் தொடரும்.
போதுமான விநியோகத்தை உறுதி செய்ய ஒரு வாடிக்கையாளருக்கு இரு மூட்டை அரிசி என்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பட்ரூல் ஹிஷாம் கூறினார்.
“எனவே இந்த அரிசின் 26 ரிங்கிட். அவர்களுக்கானது. ஆகவே, நாங்கள் உற்பத்தி செய்யும் இரண்டு கோடியே 40 லட்சம் அரிசிப் பைகளும் நேரடியாக நாம் இலக்கு கொண்டிருக்கும் குழுவை சென்றடைவதை உறுதிச் செய்வோம். நாங்கள் முதல் முறையாக செய்யும் இத்திட்டத்தில் சில பலவீனங்கள் மற்றும் குறைபாடுகள் இருக்கும் என்பதில் உறுதியாக உள்ளோம். ஆனால், அனைத்து உரிமையாளர்களுக்கும் மற்றும் ஆர்வமுள்ள மக்களுக்கு சொல்வது என்னவென்றால், இத்திட்டத்தை ஆறு மாதங்களில் வெற்றிகரமாக செயல்படுத்த அரசாங்கத்திற்கு முழு ஆதரவு வழங்க வேண்டும்”, என்று அவர் கூறினார்.
ரஹ்மா விற்பனைத் திட்டம் உட்பட வறுமையான பகுதிகளில் உள்ள 36 ஆயிரம் உரிமம் பெற்ற சில்லறை விற்பனையாளர்கள், இந்த அரிசி விநியோகத்தை மேற்கொள்வர்.
இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர்கள் சந்திப்பில் பட்ரூல் ஹிஷாம் அவ்வாறு தெரிவித்தார்.
Source : Bernama
#WhiteRicePrice
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews
Comments are closed, but trackbacks and pingbacks are open.