காசாவின் நிலைமை பாதுகாப்பாக இருந்தால் பாலஸ்தீனர்கள் திருப்பி அனுப்பப்படுவர்

காசாவின் நிலைமை பாதுகாப்பாக இருந்தால் பாலஸ்தீனர்கள் திருப்பி அனுப்பப்படுவர்

ஜாலான் பார்லிமன், 25/02/2025 : காசாவில், ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு நிலைமை பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டால் ​​மலேசியாவிற்கு அழைத்து வரப்பட்ட பாலஸ்தீனர்கள் திரும்ப அனுப்பப்படுவர்.

சம்பந்தப்பட்ட மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதால், அந்த செயல்முறைக்கு சற்று அவகாசம் தேவைப்படும், ஏனெனில் பேச்சுவார்த்தைகள் இரு நாடுகளையும் உள்ளடக்கியிருப்பதாக தற்காப்பு துணை அமைச்சர் அட்லி சஹாரி கூறினார்.

“போர்நிறுத்த நடைமுறைக்குப் பிறகு, பாலஸ்தீனர்களை மீண்டும் காசாவிற்கு அனுப்ப முடிவு செய்தோம். இராணுவப் படையினர், எகிப்திய அரசாங்கத்துடன் தொடர்பு கொள்ள வேண்டியிருப்பதால், அதன் செயல்முறைக்கு சில கால அவகாசம் தேவைப்படுகின்றது. ஏனெனில், அந்த செயல்முறையில் இரண்டு அரசாங்கங்கள் ஈடுபட்டிருப்பதை நாம் அறிவோம்”, என்று அவர் கூறினார்.

இன்று, கோலாலம்பூரில் நடைபெற்ற 2025-ஆம் ஆண்டிற்கான முதல் தேசிய சேவை பயிற்சி திட்டம், PLKN 3.0, பயிற்சி அணிவகுப்பின் நிறைவு விழாவில் கலந்து கொண்ட பின்னர், அட்லி சஹாரி அத்தகவலைக் கூறினார்.

பாலஸ்தீனர்களைத் திருப்பி அனுப்பும் செயல்முறையை எளிதாக்க, மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை மற்றும் சம்பந்தப்பட்ட அரசு சாரா அல்லது அரசு நிறுவனங்களுடன், தற்காப்பு அமைச்சு ஒத்துழைப்பை மேற்கொள்ளும் என்றும் அவர் விவரித்தார்.

Source : Bernama

#Gaza
#PalestineIssue
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews

Comments are closed, but trackbacks and pingbacks are open.