ஜாலான் பார்லிமன், 25/02/2025 : 2022-ஆம் ஆண்டில் இருந்து பிப்ரவரி 15-ஆம் தேதி வரை ஆபாச அம்சம்கள் கொண்ட 3,679 அகப்பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன.
1998-ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம், சட்டம் 588-இன் கீழ் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்சிஎம்சி தரப்பின் விண்ணப்பத்தின் படி, அதே காலக்கட்டத்தில் ஆபாச அம்சங்கள் கொண்ட 1993 சமூக ஊடக உள்ளடக்கங்கள் சம்பந்தப்பட்ட தளங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
“சமூக ஊடகத்தில் உள்ள ஆபாச விளம்பரங்கள் அடையாளம் காணப்பட்டு, தடை செய்யப்படுவதையும் உடனடியாக நீக்கப்படுவதையும் உறுதிசெய்ய எம்சிஎம்சி-இன் ஆக்கப்பூர்வமான கண்காணிப்பு நடவடிக்கையும் அச்சேவை வழங்குநர்களின் ஒத்துழைப்பும் தொடர்ந்து மேம்படுத்தப்படும்”, என்று அவர் கூறினார்.
சமூக ஊடகம், செய்தி தாள்கள், இணையம் வழியான ஊடகங்களில் ஆபாச விளம்பரங்களைக் கையாள அமைச்சின் கொள்கை மற்றும் நடவடிக்கை குறித்து இன்று மக்களவையில் வாய்மொழி கேள்வி பதில் நேரத்தின்போது காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹலிமா அலி எழுப்பியக் கேள்விக்கு ஃபஹ்மி அவ்வாறு பதிலளித்தார்.
இணையம் வழியான ஊடக பாதுகாப்பும் பயன்பாட்டு நெறிமுறைகளும் சட்டம் 588 மற்றும் அதன் தொடர்புடைய இதர சட்டங்களில் உள்ள சட்டவிதிகளை மீறாததை எம்சிஎம்சி உறுதிசெய்யும் என்று அவர் கூறினார்.
Source : Bernama
#FahmiFadzil
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews
Comments are closed, but trackbacks and pingbacks are open.