பி.எல்.எஸ்.பி-யின் கட்டுமானம் விரைவுப்படுத்தியதன் மூலம் 170 கோடி ரிங்கிட் சேமிப்பு

பி.எல்.எஸ்.பி-யின் கட்டுமானம் விரைவுப்படுத்தியதன் மூலம் 170 கோடி ரிங்கிட் சேமிப்பு

ஜாலான் பார்லிமன், 25/02/2025 :  சுங்கை கோலோக் ஒருங்கிணைந்த ஆற்றுப்படுகைத் திட்டம், பி.எல்.எஸ்.பி-யின் கட்டுமானத்தை விரைவுப்படுத்தியதன் மூலம் 170 கோடி ரிங்கிட்டை அரசாங்கம் சேமித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு மன்றம் பராமரிக்கும் கட்டம் உட்பட கட்டுமானத்தின் மூன்று கட்டங்களையும் ஒருங்கிணைக்க அரசாங்கம் செய்த முடிவே அதற்கு காரணம் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

“எங்களின் விவாதம், சுங்கை கோலோக், ரந்தாவ் பஞ்சாங் மற்றும் அதன் அகழ்வாராய்ச்சி பிரச்சனைகளை உள்ளடக்கியது. மத்திய அரசாங்கம் மற்றும் தாய்லாந்து அரசாங்கம் சம்பந்தப்பட்ட சுங்கை கோலோக் ஆற்றை சுத்தம் செய்வது. அதனை விரைவுப்படுத்த கூடுதல் 200 கோடி ரிங்கிட் தேவை”, என்று அவர் கூறினார்.

நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு முன்னதாக 24 மாதங்களுக்கு மேல் தேவைப்பட்டதை விட ஆறு மாதங்களில் முடித்துக் கொடுப்பதற்கு, கிளந்தான் மாநில அரசாங்கம் உத்தரவாதம் அளித்திருப்பதாக, நிதி அமைச்சருமான அன்வார் கூறினார்.

Source : Bernama

#PMAnwar
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews