ஜூலை 17-ஆம் தேதி ஆம்ஸ்டர்மிலிருந்து கோலாலம்பூர் நோக்கி வந்துக்கொண்டிருந்த MH17 விமானம் உக்ரைன் எல்லையில் வான்வெளியில் சுடப்பட்டதாக வீண் வதந்திகளைப் பரப்ப வேண்டாம். 298 உயிர்களைப் பலிகொண்ட அவ்விமானம் தரையிலிருந்து ஆகாயத்தை நோக்கி சுட்டுவீழ்த்தப்பட்டது என தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஷாமுடின் துன் உசேன் தெரிவித்துள்ளார்.
“கீழே விழுந்து நொறுங்கிய விமானப் பாகங்களைப் பார்க்கும் போது, அது தரையிலிருந்து வானை நோக்கிச் சுடப்பட்டதையே புலப்படுத்துகிறது. மாறாக “Air to air” எனப்படும் வான் தாக்குதலுக்குள்ளாக்கப்படவில்லை என அமைச்சர் உறுதி படுத்தினார்.
விமானத்தின் கறுப்பு பெட்டி ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருகிறது. விமானத்தின் உடைந்த பாகங்களும் சோதனைக்குட்படுத்தப்படும் என டத்தோ ஶ்ரீ இஷாமுடின் துன் உசேன் தெரிவித்தார்.