கடந்தாண்டு வரை பெண் திட்டம் மூலம் 3,577 தொழில்முனைவோர் பலன்

கடந்தாண்டு வரை பெண் திட்டம் மூலம் 3,577 தொழில்முனைவோர் பலன்

கோலாலம்பூர் , 24/02/2025 : கடந்தாண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரையில் இந்தியப் பெண் தொழில்முனைவோர் 3,577 பேருக்கு பெண்  திட்டத்தின் மூலம் மூன்று கோடியே 26 லட்சத்து 50,000 ரிங்கிட் நிதி வழங்கப்பட்டுள்ளது.

Amanah Ikhtiar Malaysia-இன் கீழ் முன்னெடுக்கப்பட்ட இம்முயற்சி இந்தியப் பெண்கள் பலர் தொழில்துறையில் ஈடுபட்டு தங்களையும் தங்கள் குடும்பத்தையும் மேம்படுத்திக் கொள்ள பெரிதும் உதவுவதாக தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

இல்லத்தரசிகள், குறு தொழில்முனைவோராக ஈடுபட ஊக்குவிக்கும், குறிப்பாக அண்மைய தொழில்நுட்பம், திறன் பயிற்சி மற்றும் வணிக திறன்களைப் பயன்படுத்துவதற்கு அமைச்சின் முயற்சிகள் குறித்து, இன்று மக்களவையில் Sungai Besar நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ முஸ்லிமின் யாஹ்யா எழுப்பிய கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.

Source : Bernama

#PENN
#DatukSeriRamanan
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews

Comments are closed, but trackbacks and pingbacks are open.