வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு SIMPANAN NASIONAL வங்கியின் மூலம் நிதியுதவி வழங்க பேச்சுவார்த்தை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு SIMPANAN NASIONAL வங்கியின் மூலம் நிதியுதவி வழங்க பேச்சுவார்த்தை

கோத்தா கினபாலு, 24/02/2025 : வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் Ihsan நிதி உதவியை இவ்வாண்டு தொடங்கி Simpanan Nasional வங்கியின் மூலம் விநியோகிக்கப்படுவதற்கான பேச்சவார்த்தையில், தேசிய பேரிடர் நிர்வகிப்பு நிறுவனம் நட்மாவும் நிதி அமைச்சும் ஈடுபட்டு வருகின்றன.

மாவட்ட அலுவலகம் மற்றும் கிராம மேம்பாடு மற்றும் பாதுகாப்பு செயற்குழு மூலம் வழங்கி வந்த முந்தைய முறையை மற்றுவதற்காக, இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக, துணை பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி கூறினார்.

“எனவே, இவ்வாண்டு தொடங்கி நட்மா மற்றும் நிதி அமைச்சு வழக்கமான முறையில் விநியோகிக்கும் முறையை மாற்றியுள்ளது. இனி, மாவட்ட அலுவலகங்கள் மற்றும் ஜே.கே.கே. அல்லது ஜே.பி.கே.கே.பி-இன் மூலம் இல்லை. மாறாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலுக்கு ஏற்ப சிம்பனன் நேஷனல் வங்கியின் மூலம் நிதியுதவி கிடைக்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தினோம்,” என்றார் அவர்.

இன்று, கோத்தா கினபாலு, Lido Bandaraya பகுதியில் மேற்கொள்ளப்படும், RTB எனும் வெள்ளத் தடுப்பு திட்டத்தைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் அவ்வாறு கூறினார்.

Source : Bernama

#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews

Comments are closed, but trackbacks and pingbacks are open.