கோலாலம்பூர் , 24/02/2025 : கடந்தாண்டு ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட திருத்தம் செய்யப்பட்ட 1957ஆம் ஆண்டு தணிக்கைச் சட்டம், சட்டம் 62 வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட ஒவ்வொரு பொது நிதி ஒதுக்கீடும் முறைகேடு செய்யப்படாததை உறுதிசெய்வதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளில் ஒன்றாகும்.
திருத்தம் செய்யப்பட்ட அச்சட்டம், தேசிய தணிக்கை துறை தலைவருக்கு, புதிய அதிகாரத்த வழங்கும் என்று சட்டம் மற்றும் கழகச் சீர்த்திருத்தத்திற்கான பிரதமர் துறை துணை அமைச்சர் எம். குலசேகரன் கூறினார்.
“நிறுவனங்கள் உட்பட மற்ற அமைப்புகளில் தணிக்கை செய்யும் அதிகாரம் பிற அமைப்பிற்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. கூட்டாட்சி அல்லது மாநிலத்திடமிருந்து நிதி உத்தரவாதங்களைப் பெறும் நிறுவனங்கள் மற்றும் பொதுப் பணத் தணிக்கை அணுகுமுறையைப் பின்பற்றுதல் ஆகியவை சட்டம் 62-இன் கீழ் உள்ள புதிய வழிமுறைகளில் அடங்கும். அதன் மூலம், வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்ட அனைத்து பொது நிதி ஒதுக்கீடுகளும் தவறாக பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய முடியும்,” என்றார் அவர்.
வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி தவறாக பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதிச் செய்வதற்கான அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து, இன்று மக்களவையில், பாசிர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் ஜமாலுடின் யாஹ்யா எழுப்பிய கேள்விக்கு, அவர் அவ்வாறு பதிலளித்தார்.
Source : Bernama
#Kulasekaran
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews
Comments are closed, but trackbacks and pingbacks are open.