மதி இறுக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் ‘நட்புமுறை ஓட்டம்’

மதி இறுக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் 'நட்புமுறை ஓட்டம்'

கோலாலம்பூர், 23/02/2025 : Autism எனப்படும் மதி இறுக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, முதல் முறையாக நடைபெற்ற Fun Run 2025 ஓட்டத்தில் சுமார் 4,000 பங்கேற்பாளர்களுடன் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஃபடில்லா யூசோப்பும் கலந்து கொண்டார்.

கோலாலம்பூர் மாநகராண்மைக் கழகம், இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை மற்றும் கூட்டரசுப் பிரதேச இஸ்லாமிய மதத் துறை ஆகியவற்றுடன் இணைந்து, சிறப்பு குழந்தைகளுக்கான தொண்டு நிறுவனம் மற்றும் டக்வா அமைப்பு ஏற்பாடு செய்திருந்த, இந்த ஓட்டத்தில் Autism பிள்ளைகளும் கலந்து கொண்டனர்.

மதி இறுக்கப் பிரச்சனை உடையவர்களின் நிலைமையைப் பற்றி உணர்வதற்கும், அவர்கள் மீதான சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்நிகழ்ச்சி துணைப் புரிந்துள்ளதாக டத்தோ ஸ்ரீ ஃபடில்லா யூசோப் கூறினார்.

”இத்தகைய திட்டங்களின் மூலமாக மதி இறுக்கப் பிள்ளைகள் சிறப்பு வாய்ந்தவர்கள் என்பதை சமூகத்தினர் பலர் உணர்வார்கள் என்று நம்புகிறோம். எங்கள் பிள்ளைகளுக்கு அவர்களுக்கென்று தனிச் சலுகைகள் உள்ளன. இருக்கும் தலைமுறைக்கு விழப்புணர்வை ஏற்படுத்த இந்தப் பிள்ளை எவ்வாறு ஆதரிக்க வேண்டும் என்ற நம்பிக்கையை ஒன்று சேர்ந்து விதைக்க வேண்டும். நாம் அவர்களுக்கு செய்யும் உதவி பண வடிவில் இருக்க வேண்டியது அவசியமில்லை. மாறாக இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும் தார்மீக ஆதரவாகக் கருதப்படுகிறது”, என்று அவர் கூறினார்.

இதனிடையே, மன இறுக்கம் கொண்ட தனது எட்டு வயது மகனுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக இந்த ஓட்டத்தில் தாம் உற்சாகத்துடன் கலந்து கொண்டதாக பங்கேற்பாளர்களில் ஒருவரான அசிரா ஹாஷிம் கூறினார்

”முன்பெல்லாம் என் மகனால் மற்றவர்களுடன் பழக முடியாது. இப்போதெல்லாம் தனது சக நண்பர்களுடன் உறவாட பழகிக் கொண்டான். முன்பெல்லாம் அவன் தனியே காணப்படுவான்”, என்று அவர் தெரிவித்தார்.

Source : Bernama

#AutismFunRun2025
#AutismAwareness
#AutismInMalaysia
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews

Comments are closed, but trackbacks and pingbacks are open.