புத்ராஜெயா, 23/02/2025 : கடந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில், தனது பங்களிப்பாளர்களுக்கு சிறந்த அடைவிலான இலாப ஈவுத்தொகையை ஊழியர் சேமநிதி வாரியமான KWSP அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், KWSP தனது திறன்மிக்க செயலாக்கத்தின் அடிப்படையில், 2024-ஆம் ஆண்டிற்கான சிறந்த இலாப ஈவுத்தொகைக்கான நற்செய்தியை அறிவிக்கும் என அதன் பங்களிப்பாளர்கள் எதிர்பார்க்கலாம் என்று இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அமிர் ஹம்சா அசிசான் கூறினார்.
2022-ஆம் ஆண்டில் இருந்த, 5,033 கோடி ரிங்கிட் மொத்த விநியோகத்துடன் அதாவது 5.35 விழுக்காட்டுடன் ஒப்பிடுகையில், 2023-ஆம் ஆண்டில் 5.50 விழுக்காடு கூடுதல் ஈவுத்தொகை பெற்றிருப்பதாக, KWSP முன்னதாக அறிவித்திருந்தது.
மேலும், 2022-ஆம் ஆண்டில் 4.75 விழுக்காடாக இருந்த, SHARIAH சேமிப்பு தொகை, 748 கோடி ரிங்கிட் மொத்த விநியோகத்துடன் 5.40 விழுக்காட்டாக பதிவாகியுள்ளது.
“கடந்தாண்டின் மூன்றாவது காலாண்டு வரையில் உள்ள அதன் செயல்திறன் வரவேற்கக்கூடியது. மூன்றாவது காலாண்டு வரையில் 5,750 கோடி ரிங்கிட் கிடைத்து விட்டது. முந்தைய ஆண்டைக் காட்டிலும் இது சிறந்த அடைவாகும். எனவே, அந்த செயல்திறன் நான்காவது காலாண்டு வரை தொடர வேண்டும். ஈவுத்தொகையும் ஊக்கமளிக்கப்பட வேண்டும். ஆனால், என்னால் ஈவுத்தொகை குறித்து கருத்துரைக்க முடியாது. காத்திருக்க வேண்டும். சிறப்பானதாக இருக்கும் என்று கூறலாம்,” என்றார் அவர்.
இன்று, புத்ராஜெயா டத்தாரான் வாவாசானில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் அவ்வாறு கூறினார்.
இதனிடையே, 2024-ஆம் ஆண்டு KWSP-இன் இலாப ஈவுத்தொகை விழுக்காடு குறித்து, அடுத்த மாத தொடக்கத்தில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Source : Bernama
#EPF
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews
Comments are closed, but trackbacks and pingbacks are open.