கூச்சிங், 23/02/2025 : மாநில அரசாங்கத்திடம் இருந்து இலவச உயர்கல்வியைப் பெறும் சரவாக் மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள், பட்டப்படிப்பு முடிந்ததும் அம்மாநிலத்திலேயே பணியாற்ற வேண்டிய கட்டாயம் இல்லை.
சரவாக் மாநிலத்திற்கு வெளியே வேலை செய்து அனுபவத்தைப் பெற மாணவர்கள் ஊக்குவிக்கப்படும் நிலையில், பின்னர் தங்கள் சொந்த மாநிலத்தில் பணியாற்றத் திரும்புலாம் என்று அம்மாநில முதலமைச்சர் டான் ஶ்ரீ அபாங் ஜொஹாரி துன் ஒபெங் தெரிவித்தார்.
இன்று, சரவாக் கூச்சிங்கில் பல் சிகிச்சையகத்தை திறந்து வைத்தப் பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
ஐந்து கல்வி நிறுவனங்களை உள்ளடக்கி, 2026-ஆம் ஆண்டுக்குள் சரவாக் மாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி நிதியை அம்மாநில அரசாங்கம் வழங்கவுள்ளது.
Source : Bernama
#SarawakHigherEducation
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews
Comments are closed, but trackbacks and pingbacks are open.