புத்ராஜெயா, 23/02/2025 : விரைவான பொருளாதார மீட்சியும் நாட்டை மேம்படுத்தும் மக்களின் திறனும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை மலேசியாவில் முதலீடு செய்ய ஈர்க்கின்றன.
வலுவான பொருளாதார வளர்ச்சியையும் அதிக முதலீடுகளையும் இந்நாடு கொண்டுள்ளதாக வெளிநாட்டுத் தலைவர்களும் நிறுவனங்களும் காண்பதால் மலேசியா இத்திறனைக் கொண்டுள்ளதாக பிரதமர் விளக்கினார்.
“இது ஆச்சரியமாக இருக்கிறது. பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்கள் நிம்மதியாக வாழ முடிவதற்கான நாடு உலகில் எங்கே உள்ளது? மேலும் மலேசியாவும் சிறந்த நாடுகளில் ஒன்றாகும். நாடு கொஞ்சம் பின் தங்கி, பல்வேறு ஊழல்களால் பலவீனமடைந்தது, பின்னர் கொவிட் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு இப்போது அது மீண்டும் முன்னேறி வருகிறது. நல்ல அமைப்பு, அதிக முதலீடு, ஏ.ஐ. மையம், தரவு மையம், குறைக்கடத்தி மையம் ஆகியவை உள்ளன,” என்றார் அவர்.
நாட்டை மேம்படுத்தவும் உயர்த்தவும் மக்கள் ஒன்றிணைந்து செயல்படும் திறனைப் பொறுத்தே, வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் நாட்டின் திறன் அமைந்துள்ளதாக அவர் விளக்கினார்.
இனி, அதிகமான வெளிநாட்டுத் தலைவர்கள் மலேசியாவுக்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அன்வார் கூறினார்.
Source : Bernama
#PMAnwar
#ForeignInvestment
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews