புத்ராஜெயா, 23/02/2025 : பயனற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்து தொழில்நுட்பத் திறன்கள், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இலக்கவியல் ஆகியவற்றில் மலேசியா கவனம் செலுத்த வேண்டும்.
தொழில்நுட்ப திறன்களை தீவிரமாக வலுப்படுத்தி இலக்கவியலை நோக்கி மாற்றத்தை துரிதப்படுத்தும் பிற வளர்ந்த நாடுகளை மலேசியா பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியிருக்கிறார்.
“சீனா, ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகள் இப்போது தொழில்நுட்ப திறன்கள், செயற்கை நுண்ணறிவு, இலக்கவியல் மயமாக்கலை மேம்படுத்தப் போட்டியிடுகின்றன. அதனால்தான் நம் அனைவரின் பொறுப்பாகும். தனியார் துறை உட்பட புத்ராஜெயா, அதன் நிறுவனங்கள், மற்றும் அரசுத் துறைகள் கவனம் செலுத்த வேண்டும். முதலில், நமது செயல்திறனை உயர்த்த வேண்டும். சிறந்த சேவையை வழங்குங்கள். வாய்ப்புகளைப் பயன்படுத்தி உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் சட்டவிரோத வழிகளில் வளப்படுத்துவதை நிறுத்துங்கள்,” என்றார் அவர்.
ஞாயிற்றுக்கிழமை, புத்ராஜெயாவில் புதுப்பிக்கப்பட்ட Alamanda பேரங்காடியை திறந்து வைத்து உரையாற்றும் போது பிரதமர் அவ்வாறு கூறினார்.
மலேசியாவும் பிரான்சும் பாதுகாப்பு, பொருளாதாரம், எரிசக்தி, வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இணக்கம் கண்டுள்ளதாக கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி அன்வார் கூறியிருந்தார்.
Source : Bernama
#PMAnwar
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews
Comments are closed, but trackbacks and pingbacks are open.