கோலாலம்பூர், 22/02/2025 : ஜோகூரின் ஜேடிதி மற்றும் ஶ்ரீ பாகாங் அணிகளுக்கு இடையிலான மலேசிய கிண்ண காற்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் , ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெறவுள்ளது.
இந்த பருவத்திற்கான மலேசிய லீக் அட்டவணையை கருத்தில் கொண்டு, அத்தேதி முடிவு செய்யப்பட்டதாக மலேசிய காற்பந்து லீக் MFL இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வரும் மார்ச் மாதம் 4-ஆம் தேதி நடைபெறவுள்ள, உயர் நிலை ஆசிய வெற்றியாளர் லீக் கிண்ண போட்டியின் 16 குழுக்களுக்கான சுற்றில் ஜேடிதி பங்கேற்கவிருப்பதால், இந்த தேதி தேர்தெடுக்கப்பட்டதாக MFL தெரிவித்தது.
ஜேடிதி காலிறுதிக்கு முன்னேறினால், அந்த ஆட்டம் ஏப்ரல் 25ஆம் தேதியன்று நடைபெறும் எதிர்பார்க்கப்படுவதால், அக்கிளப்பிற்கு வழி விடும் வகையில் இந்தத் தேதி நிர்ணயம் செய்யபட்டுள்ளது.
அதேவேளையில், 98-வது முறையாக நடைபெறும் மலேசிய லீக் போட்டியின், இறுதி ஆட்டத்திற்கான தேதியை உறுதி செய்வதில் பகாங் அணியும் இணக்கம் தெரிவித்துள்ளதாக MFL கூறியது.
Source : Bernama
#MalaysianFootballLeague2025Finals
#MalaysianFootBall
#MFL2025
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews
Comments are closed, but trackbacks and pingbacks are open.