கோலாலம்பூர், 22/02/2025 : பெரிய நகரங்களின் எழில் காட்சிகள் ஒரு நாட்டிற்கு அடையாளமாக விளங்குகின்றன.
இதன் வழி, சுற்றுலா மற்றும் மக்களின் பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்த முடியும்.
இதனை கருத்தில் கொண்டே, வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சு கேபிகேதி நகரப் புதுப்பித்தல் சட்ட மசோதாவை இயற்றி, ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யவிருக்கிறது.
இதன் வழி, நாடு முழுவதும் உள்ள பாழடைந்த கட்டிடங்கள் மக்களின் நல்வாழ்வுக்காக புதிய தோற்றத்தைப் பெறும் நோக்கில், கேபிகேதி கீழ் உள்ள நகர மற்றும் கிராம திட்டமிடல் துறை, PLANMalaysia பல திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
அந்த திட்டங்கள் முழுமை பெற, சம்பந்தப்பட்ட ஒவ்வொரு தரப்பினருக்கும் தெளிவான வழிகாட்டல் அவசியம் என்று PLANMalaysia தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் அலியாஸ் ரம்லி தெரிவித்தார்.
”நகரங்களில் மறு மேம்பாடு அம்சங்கள் தொடர்பாக நாங்கள் பல்வேறு வழிகாட்டிகளை வகுத்துள்ளோம். இருப்பினும் அவை போதுமானதாக இல்லை என்பதை நாங்கள் அறிந்தோம். குறிப்பாக உள்ளூர் அதிகாரிகளால் அல்லது பல்வேறு நிறுவனங்களால் செயல்படுத்தப்பட்டாலும் இல்லாவிட்டாலும் வழிகாட்டிகள் மட்டுமே இருக்கும். அதனால்தான் எங்களுக்கு ஓர் அதிகாரம் தேவை”, என்றார் அவர்.
strata திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் ஒவ்வொரு முயற்சிக்கும், குடியிருப்பாளர் ஒப்புதல் வரம்பு மிகவும் நியாயமான அளவுக்குக் குறைக்கப்படும் என்று கடந்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
30 ஆண்டுகளுக்குக் குறைவான கட்டிடங்களுக்கு 80 விழுக்காடும், 30 ஆண்டுகளுக்கு மேலான பழமையான கட்டிடங்களுக்கு 75 விழுக்காடும், பாழடைந்த அல்லது பயன்படுத்த பாதுகாப்பற்ற கட்டிடங்களுக்கு 51 விழுக்காடாக தொடக்க மதிப்பு நிர்ணயிக்கப்பட்டதால், நாடாளுடமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
இருப்பினும், ஒவ்வொரு பரிந்துரையும் உரிமையாளரால் ஒப்புக் கொள்ளப்பட வேண்டும் என்று டாக்டர் அலியாஸ் விளக்கினார்.
.”மேலும் உரிமையாளர் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், அவர்கள் பொருத்தமான இழப்பீட்டு மதிப்பை தீர்மானிக்க உயர் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லலாம்”,என்றார் அவர்.
ஒரு உடன்பாட்டைக் காண மேம்பாட்டு நிறுவனமும் உரிமையாளரும் கட்டம் கட்டமாக பேச்சுவார்த்தை மேற்கொள்வர் என்றும் அவர் கூறினார்.
Source : Bernama
#DatukDrAliasRameli
#PLANMalaysia
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews
Comments are closed, but trackbacks and pingbacks are open.