கோலாலம்பூர், 22/02/2025 : நாட்டையும் மக்களின் நல்வாழ்வையும் மேம்படுத்தும் முயற்சியில் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான ஒற்றுமையும் ஒத்துழைப்பும் மிகவும் நேர்த்தியாகவும் சிறப்பானதாகவும் இருத்தல் வேண்டும்.
நாட்டுக்கும் மக்களுக்கும் பயனளிக்காத விவாகரங்களை விவாதித்து நேரத்தை செலவழிப்பதை காட்டிலும், நாடு எதிர்நோக்கும் தற்போதைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் மக்கள் பிரதிநிதிகள் கவனம் செலுத்த வேண்டும்.
மக்கள் பிரதிநிதிகளுக்கு இடையே ஒற்றுமையும் ஒத்துழைப்பும் தொடர்ந்து பேணப்படுவதன் முக்கியத்துவத்தை, நாட்டின் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் 15-வது நாடாளுமன்றத்தின் நான்காவது தவணைக்கான கூட்டத் தொடரின்போது வலியுறுத்தினார்.
அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிர்வாக விஷயங்களிலும் அதன் வளர்ச்சிகளிலும் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
அதேவேளையில், நாட்டில் மக்களின் நல்வாழ்வையும் சுபிட்சத்தையும் முன் நிறுத்தி அரசின் நிறைக் குறைகளை சுட்டிக்காட்டி தக்க வகையில் செயல்படும் போக்கை எதிர்கட்சி உறுப்பினர்கள் கொண்டிருக்க வேண்டும்.
”இந்த அரசியலை எல்லாம் நிறுத்த வேண்டும் என்று மாமன்னர் கூறியுள்ளார். பணிகள் நடக்க வேண்டும் என அவர் விரும்புகின்றார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது மக்கள் பிரதிநிதிகள், மக்களை கவனித்துக்கொள்வதே அவர்களுக்கு மிக முக்கியமான பணியாகும். சமூகத்தை கவனிப்பது, நாட்டைக் கவனிப்பது, பொருளாதாரத்தை கவனிப்பதாகும். மாறாக அரசியலில் விளையாடுவதல்ல”, என்றார் தொழில்முனைவோர் & கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்.
”அரசாங்கத்தை அவதூறாகப் பேசுவதையோ அல்லது மோசமான கருத்தை வெளிப்படுத்துவதையோ நாங்கள் விரும்பவில்லை. குறிப்பாக மக்களுக்கு நன்மை பயக்கும் விஷயங்களை விவாதிப்பதில் எதிர்க்கட்சிகள் சிறப்பாக செயல்பட வேண்டும்”, என்றார் பெந்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் யோங் சேஃபுரா ஒத்மான்.
அதோடு, அரசாங்கத்தைக் கைப்பற்றுவதற்காக மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும், உணர்வு ரீதியிலான நடவடிக்கைகளை பொறுப்பற்ற தனி நபர்களோ, கட்சிகளோ நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகின்றது.
Source : Bernama
#Parliament
#Agong
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews
Comments are closed, but trackbacks and pingbacks are open.