கோலாலம்பூர், 22/02/2025 : இன்று காலை, கோலாலம்பூரில், தித்திவங்சா எல்.ஆர்.டி இரயில் நிலையத் தண்டவாளத்தில் தவறி விழுந்ததாக நம்பப்படும் மாற்றுத்திறனாளி ஆடவர் ஒருவர், இரயில் மோதி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து, காலை மணி 8.38 அளவில் MERS-999 செயல்முறையின் மூலம் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக தங்களுக்கு அவசர அழைப்பு கிடைத்ததாக, கோலாலம்பூர் நடவடிக்கை பிரிவின் மூத்த தீயணைப்பு அதிகாரி, கொமன்டர் ஃபாடில் ஹிசாம் முஹமட் தெரிவித்தார்.
பார்வை குறைபாடுடைய அந்த மாற்றுத்திறனாளி ஒரு சீனர் என்றும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தை சுகாதார அமைச்சின் ஊழியர் உறுதிசெய்ததாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் கூறினார்.
நிலைத்தடுமாறி அந்த மாற்றுத்திறனாளி தவறி விழுந்த வேளையில், அதனை ரயில் ஓட்டுநர் கவனிக்காமல், அச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய, தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருப்பதோடு, இரயிலின் செயல்பாட்டு பதிவுகளையும் அமலாக்கத் தரப்பினர் சோதனையிட்டனர்.
பின்பற்றப்பட்ட அனைத்து செயல்பாட்டு தர விதிமுறைகளுக்கு இணங்க, விசாரணை நடவடிக்கைகளின் பாதுகாப்பு மற்றும் சீரான தன்மையை உறுதி செய்ய, உயிரிழந்தவரின் சடலத்தை அகற்றும் பணி, கவனமாக மேற்கொள்ளப்பட்டது.
Source : Bernama
#LRTAccident
#TrainAccident
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews
Comments are closed, but trackbacks and pingbacks are open.