நாடாளுமன்ற சேவை & அரசியலமைப்பு சட்ட மசோதாக்கள் விவாதிக்கப்படும்

நாடாளுமன்ற சேவை & அரசியலமைப்பு சட்ட மசோதாக்கள் விவாதிக்கப்படும்

கோலாலம்பூர், 22/02/2025 : இம்முறை நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், 2025-ஆம் ஆண்டு நாடாளுமன்ற சேவை சட்ட மசோதா மற்றும் 2025-ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட மத்திய அரசியலமைப்பு சட்ட மசோதாவை தாக்கல் செய்து, அதன் ஒப்புதலுக்காக விவாதிக்கப்படும் என்று அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

வரும் பிப்ரவரி 24-ஆம் தேதி, சட்டம் மற்றும் கழகச் சீர்திருத்தத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸாலினா ஒத்மான் சைட் அவ்விரு சட்ட மசோதாகளின் முதல் வாசிப்பை மேற்கொள்ள அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக தொடர்பு அமைச்சர்
ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

எதிர்வரும் மார்ச் நான்காம் தேதி பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அச்சட்டங்களின் இரண்டாம் வசிப்பை மேற்கொள்ள பரிந்துரை வைக்கப்பட்டதாக மடானி அரசாங்கத்தின் செய்தி தொடர்பாளருமான ஃபஹ்மி ஃபட்சில் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையின் வழி தெரிவித்தார்.

சீர்திருத்தங்களை செயல்படுத்துவதற்கும் நாட்டில் ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துவதற்மான மடானி அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை இந்நடவடிக்கை புலப்படுத்துவதாக அவர் கூறினார்.

நாட்டின் முக்கிய ஜனநாயக நிறுவனமான நாடாளுமன்றத்தை, சீர்திருத்தவும் மேம்படுத்தவும் கையாளும் முயற்சிகளில் 2025ஆம் ஆண்டு நாடாளுமன்ற சேவை சட்ட மசோதா முதல் நடவடிக்கையாகும் என்று ஃபஹ்மி தெரிவித்தார்.

Source : Bernama

#Parliament
#Agong
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews

Comments are closed, but trackbacks and pingbacks are open.