கோலாலம்பூர், 22/02/2025 : விமர்சனங்களை திறந்த மனதுடன் ஏற்றுக்கொண்டு அமைச்சரவை உறுப்பினர்கள் அரசாங்கத்தில் உள்ள பலவீனங்களைச் சரிசெய்ய வேண்டும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்களின் குரலுக்கும் தேவைக்கும் முக்கியத்துவம் அளிக்கும் அரசாங்கமாக மடானி அரசாங்கம் விளங்குவதற்கு அமைச்சரவை ஒரு மித்த உணர்வுடன் செயல்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
புவிசார் அரசியலும் தொழில்நுட்ப சூழ்நிலைகளும் இன்றைய சவால்களை உள்ளடக்கி இருப்பதால், சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுவதற்கு எந்தவொரு அரசாங்கமும் மாற்றங்களுடன் விரைந்து செல்ல வேண்டும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
இந்த ஒற்றுமை, அமைச்சரவை உறுப்பினர்களிடையே, ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் ஒரு தளமாக இருப்பதோடு, மக்களின் நல்வாழ்வு மற்றும் நாட்டின் பொருளாதாரத்தின் முன்னேற்றத்தின் வியூக முன்முயற்சிக்கும் வழிவகுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சிலாங்கூர் பாங்கியில், இரு நாள்களுக்கு நடைபெறும் 2025 மடானி அரசாங்க ஒன்று கூடல் நிகழ்ச்சியில் இன்று கலந்துகொண்டபோது அன்வார் அதனைக் கூறினார்.
அதேவேளையில், ஒன்றிணைந்து மேம்படுவதற்கு, புதிய யோசனைகளை வெளிப்படுத்துவதற்கு, குறிப்பாக மக்களின் நல்வாழ்வுக்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும், இந்த ஒன்று கூடல் ஒற்றுமைக்கு ஓர் இடத்தை தொடக்கி வைத்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
Source : Bernama
#PMAnwar
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews
Comments are closed, but trackbacks and pingbacks are open.