பன்னீர் செல்வத்தின் மரணத் தண்டனை ரத்து செய்ய வாய்ப்புள்ளதா?

பன்னீர் செல்வத்தின் மரணத் தண்டனை ரத்து செய்ய வாய்ப்புள்ளதா?

கோலாலம்பூர், 21/02/2025 : சிங்கப்பூருக்குள் போதைப் பொருளைக் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு, மரணத் தண்டனை விதிக்கப்பட்ட மலேசியர், பன்னீர் செல்வம் பரந்தாமனின் தண்டனை நிறைவேற்றம், இறுதி நேரத்தில் நிறுத்தப்பட்டது.

நேற்று பிப்ரவரி 20-ஆம் தேதி நிறைவேற்றப்படவிருந்த அவரது, மரண தண்டனையை, தற்காலிகமாக நிறுத்தும்படி சிங்கப்பூரின் மேல் முறையீட்டு நிதிமன்றம் உத்தரவிட்டது.

தற்காலிக நிறுத்தத்தின் காரணம் என்ன? இந்த மரணத் தண்டனையை ரத்து செய்ய வாய்ப்பு உள்ளதா என்பது தொடர்பில், சட்டத் துறை மூத்த விரிவுரையாளர் மகேசன் ஆர்.அய்யாவுவிடம் விளக்கம் கேட்டறிந்தது பெர்னாமா செய்திகள்.

2014-ஆம் ஆண்டு, உட்லண்ட்ஸ் சுங்கச் சாவடியில் சுமார் 51 கிராம் போதைபொருள் வைத்திருந்த குற்றத்திற்காக பன்னீர் செல்வம் கைது செய்யப்பட்டார்.

சிங்கப்பூரில், 15 கிராமிற்கு மேல் போதைப்பொருளுடன் ஒருவர் பிடிபட்டால், அவருக்கு மரணத் தண்டனை விதிக்கப்படலாம் எனும் சட்டத்தின் அடிப்படையில், 2017-ஆம் ஆண்டு பன்னீர் செல்வத்திற்கு மரணத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

அவருக்கே தெரியாமல், பொட்டலத்தின் வழியாக அப்போதைப்பொருள் கடத்தப்பட்டதால், சூழ்நிலை கைதி எனும் அடிப்படையில், பன்னீர் செல்வத்திற்கான மரணத் தண்டனை நிறைவேற்றுவதை தடுக்க வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.

ஆயினும், அத்தண்டனை 2019-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்படவிருந்த வேளையில், இதேபோன்று அன்றும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், பிப்ரவரி 20-ஆம் தேதி மீண்டும் நிறைவேற்றப்படவிருந்த மரணத் தண்டனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதற்கு, இவ்வழக்க்கில் பன்னீர் செல்வத்தின் வழக்கறிஞரின் முறைகேடான நடவடிக்கையே காரணம் என்று புகாரளிக்கப்பட்டுள்ளதாக மகேஅன் தெரிவித்தார்.

ஆனால், சிங்கப்பூர் சட்டத்தின் அடிப்படையில், போதைப் பொருள் வழக்குகளில் விதிக்கப்பட்ட மரணத் தண்டனைகளுக்கு நிராகரிப்பு என்பது இல்லை அல்லது மிகவும் அரிது என்று கூறிய மகேசன், தற்போது மேல் முறையீட்டு நீதிமன்றத்திடம் சென்றுள்ள இவ்வழக்கிற்கு ஒருவேளை சாதகமான தீர்ப்பு வருவதற்கான வாய்ப்பையும் அவர் மறுக்கவில்லை.

இதனிடையே, இந்த விவகாரத்தில், மலேசிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்ப்பால் சிங் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, நேற்று முன்தினம் உள்துறை அமைச்சிடம் கோரிக்கையை முன்வைத்தது.

அதோடு, கருணை அடிப்படையில் பன்னீர் செல்வத்தின்  மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி சில தன்னார்வ மற்றும் மனித உரிமை அமைப்புகளும் பொது மக்களும் ஒன்று கூடி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Source : Bernama

#SingaporeDeathPenalty
#PanneerSelvam
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews

Comments are closed, but trackbacks and pingbacks are open.