கோலாலம்பூர், 21/02/2025 : மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் 54-வது தேசியப் பேராளர் மாநாடு பிப்ரவரி 23, 2025 அன்று IKP Bellamy, கோலாலம்பூரில் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டை மலேசிய இளைஞர் பேரவையின் தலைவர், திரு. முகாமட் இஸாத் அபிஃபி அவர்கள் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து திறப்புரை ஆற்றுவார். மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் தேசியத் தலைவர் திரு. முருகன் மணியம், உறுப்பினர்கள் அனைவரையும் இம்மாநாட்டில் கலந்து சிறப்பிக்க அழைக்கிறார்.
தமிழ் இளைஞர்களின் தலைமைத்துவ மேலாண்மைக்காக மலேசிய தமிழ் இளைஞர் மணிமன்றம் தொடர்ந்து பல முகாமைத்துவத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது. மேலும் , கல்வி, பண்பாடு, சமூக மேம்பாடு மற்றும் தலைமைத்துவம் போன்ற துறைகளில் இளைஞர்களின் வளர்ச்சிக்காக முகாமையான திட்டங்கள் இம்மாநாட்டில் விவாதிக்கப்படும். இப்பேராளர் மாநாடு தமிழ் இளைஞர்களுக்கு ஒரு முக்கியமான தளமாக அமையும்.
அனைத்து உறுப்பினர்களும், இளைஞர் தலைவர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு தங்களது ஆதரவை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
#MajlisKelabBellBeliaTamilMalaysia
#NationalConference
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews
#MalaysianTamilNews
Comments are closed, but trackbacks and pingbacks are open.