பள்ளிகளுக்கு வெளியே செயல்படும் சிறு வியாபாரிகள் மீது கடுமையான கண்காணிப்பு – கல்வி அமைச்சு

பள்ளிகளுக்கு வெளியே செயல்படும் சிறு வியாபாரிகள் மீது கடுமையான கண்காணிப்பு - கல்வி அமைச்சு

புத்ராஜெயா, 21/02/2025 : ஜவ்வு மிட்டாயை உண்டு பள்ளி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க பள்ளிகளுக்கு வெளியே செயல்படும் சிறு வியாபாரிகள் மீது  கல்வி அமைச்சு கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ளும்.

பள்ளி வளாகத்திலிருந்து 40 மீட்டர் சுற்றளவில் இது போன்ற பொருள்களை விற்காமல் இருப்பதை உறுதிசெய்ய மாநில கல்வித் துறை, JPN, பள்ளி நிர்வாகம் மற்றும் ஊராட்சி துறை அதிகாரிகளுடன் கல்வி அமைச்சு இணைந்து  செயல்படும் என்று கல்வி தலைமை இயக்குநர் அஸ்மான் அட்னான் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் பதிவேட்டில் உள்ள படி, கல்வி அமைச்சின் கீழ் உள்ள சிற்றுண்டி சாலைகளில் ஜவ்வு மிட்டாயை போன்ற உணவுப் பொருள்களை விற்பனை செய்ய அனுமதியில்லை என்று அவர் விளக்கினார்.

“பள்ளி நுழைவாயிலிலிருந்தும், பள்ளி வேலியிலிருந்தும் 40 மீட்டர் சுற்றளவில் வியாபாரிகள் வணிகம் செய்யக்கூடாது என்று வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சு,  கே.பி.கே.டி  மற்றும் சுகாதார அமைச்சு போன்ற அமைச்சுகள் வழிகாட்டுதல்களை வெளியிடப்பட்டுள்ளன. எனவே  கே.பி.கே.டி  மற்றும் சுகாதார அமைச்சுகளால் தீர்மானிக்கப்பட்ட சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் இவை,” என்றார் அவர்.

சரியான இடத்தில் சரியான உணவை எவ்வாறு வாங்குவது என்பது குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்க கல்வி அமைச்சு  நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Source : Bernama

#AzmanAdnan
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews

Comments are closed, but trackbacks and pingbacks are open.