‘BASKETBALL SOFT CANDY GUMMY’ வகையிலான ஜவ்வு மிட்டாய்கள் பறிமுதல்

'BASKETBALL SOFT CANDY GUMMY' வகையிலான ஜவ்வு மிட்டாய்கள் பறிமுதல்

ஜார்ஜ்டவுன், 21/02/2025 : GUMMY எனும் ஒருவித ஜவ்வு மிட்டாயை சாப்பிட்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த 10 வயது சிறுவன் நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தான்.

இவ்விவகாரத்தைத் தொடர்ந்து பினாங்கு மாநில சுகாதாரத் துறையான ஜேகேஎன், ஜார்ஜ்டவுன், ஜாலான் சுங்கை டூவாவில்  உள்ள ஒரு கடையில் சம்பந்தப்பட்ட Basketball Soft Candy Gummy வகையிலான ஜவ்வு மிட்டாய்களைப் பறிமுதல் செய்தது.

அப்பகுதியைச் சுற்றியுள்ள கடைகளில், பினாங்கு மாநில சுகாதாரத் துறையின் அமலாக்கப் பிரிவினர், மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில், இவ்வகை மிட்டாய்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக, மாநில சுகாதாரம் மற்றும் விளையாட்டு செயற்குழுத் தலைவர் டேனியல் கோய் ஸி சென் தெரிவித்தார்.

பள்ளிக்கு அருகிலுள்ள கடையிலிருந்து, மரணமடைந்த  அம்மாணவர் அந்த மிட்டாயை வாங்கியிருப்பது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் கூறினார்.

உணவுப் பொருளின் பாதுகாப்பு தொடர்பான மேல் விசாரணைகளை பினாங்கு JKN தற்போது மேற்கொண்டு வருவதோடு இது தொடர்பான நடவடிக்கைகள் சுகாதார அமைச்சின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரத் திட்டத்தின் தலைமையகத்தில் ஒருங்கிணைக்கப்படும்.

எனவே, உணவு பாதுகாப்பு கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளை தமது தரப்பு தொடர்ந்து மேற்கொள்வதோடு, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க உரிய நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று Daniel Gooi தெரிவித்தார்.

Source : Bernama

#GummySoftCandy
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews

Comments are closed, but trackbacks and pingbacks are open.