மனமா , 21/02/2025 : அநீதி மற்றும் கொடுமையை எதிர்கொள்ளும் பாலஸ்தீனம் மற்றும் மக்களின் பிரச்சனைகளுக்கு ஆதரவாக, மலேசியா தொடர்ந்து குரல் கொடுக்கும்.
மலேசியா, சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடு என்பதால், எங்கும் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த முடியும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
“எங்களுக்கு ஒரு நிலைப்பாடு உள்ளது. நாங்கள் அனைத்து இடங்களிலும் உறுதியாக குரல் கொடுத்துள்ளோம். நாங்கள் யாருக்கும் விரோதமாக இருக்க விரும்பவில்லை. ஆனால், எவ்விதமான கொடுமை மற்றும் கொடூரங்களில் இருந்தும் நாம் பாதுகாத்து போராட வேண்டும்,“ என்றார் அவர்.
அமெரிக்காவின் பதில் நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக, ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் பிரச்சனையில் அதிகம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம் என்று அன்வாருக்கு அறிவுறுத்தப்பட்டதாக இதற்கு முன்னர் அனைத்துலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
போஸ்னியா போர் மற்றும் தென்னாப்பிரிக்க இனவெறி காலம் உட்பட கொடுமைகளால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உதவும் மலேசியாவின் முயற்சி புதிதல்ல என்றும், அது நீண்ட காலமாக மேற்கொள்ளப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
Source : Bernama
#PMAnwar
#Bahrain
#MalaysiaBahrain
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews