கோலாலம்பூர், 20/02/2025 : தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் சிக்கல்கள் தொடர்பாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் தியோ, கல்வி அமைச்சர் பட்லினா சிடிக்கைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பு நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
கெடாவில் அமைந்துள்ள கத்தும்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி, பகாங் மாநில ஜெராம் தோட்டத் தமிழ்பள்ளி, பினாங்கு சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி விவகாரங்கள் பற்றி இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
இந்த மூன்று தமிழ்ப்பள்ளிகளின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண கல்வியமைச்சின் ஒத்துழைப்பு அவசியம் என்பதை அமைச்சர் ஒப்புக்கொண்டார். கல்வியமைச்சோடு இணைந்து இப்பள்ளிகளின் பிரச்சனைகளுக்கு தமது தரப்பு நல்லதொரு தீர்வை எட்ட முடியும் என நம்புவதாக அமைச்சர் தமதறிக்கையில் கூறினார். வரும் வாரத்தில், சம்பந்தப்பட்ட தரப்பினரோடு சந்திப்புகள் நடத்தப்படும் என கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்
தற்போது சவால்களை எதிர்நோக்கும் மேற்கண்ட தமிழ்ப்பள்ளிகள் சுமூகமான தீர்வை எட்டவும், தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதி விரைவில் சென்றடையவும், தாம் தகுந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக அமைச்சர் தமதறிக்கையில் உறுதியாகக் கூறினார்.
#GobindSinghDeo
#FadhlinaSidek
#SJKTIssues
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews
Comments are closed, but trackbacks and pingbacks are open.