பஹ்ரேன், 20/02/2025 : உலகளவில் நாட்டின் நற்பெயரைப் பேணுவதில் புலம்பெயர்ந்த மலேசியர்கள் இணைந்து பங்காற்ற வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் எதிர்பார்க்கின்றார்.
நாட்டின் தற்போதைய நற்பெயரைப் பேணுவதற்கு தூதரகங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளைத் தவிர வெளிநாட்டில் உள்ள மலேசியர்களின் தோற்றமும் நடத்தையும் மிகவும் அவசியம் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
வெளித்தரப்பினருக்கு, நாட்டை விளம்பரப்படுத்துவது உட்பட இதர விவகாரங்களுக்கான கூட்டு முயற்சிகளும் திரட்டப்பட வேண்டும் என்றும் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
”ஆனால், மலேசியா அதன் சுற்றுலாத் தளங்களை பிரச்சாரம் செய்வதில் தீவிரமாக செயல்பட வேண்டும். கோத்தா கினாபாலு, ஜோகூர், பினாங்கு, திரெங்கானு, கிளந்தான் ஆகிய மாநிலங்கள் அனைத்தும் தனித்துவம் வாய்ந்தவை,” என்றார் அவர்.
நேற்றிரவு, பஹ்ரேன், மனாமாவில் புலம்பெயர்ந்த மலேசியர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு பேசியபோது அவர் அவ்வாறு தெரிவித்தார்.
Source : Bernama
#PMAnwar
#Bahrain
#MalaysiaBahrain
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews