பஹ்ரேன், 20/02/2025 : மலேசியாவிற்கும் பஹ்ரேனுக்கும் இடையே நேரடி விமானப் பயணங்களை மீண்டும் தொடங்குவதற்கான திட்டங்கள் இன்னும் பேச்சுவார்த்தையில் உள்ளன.
பஹ்ரேன், குடாய்பியா அரண்மனையில் அதன் பட்டத்து இளவரசரும் பிரதமருமான சல்மான் ஹமாட் அல் கலிஃபாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது அவ்விவகாரம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
”இதற்கு வாய்ப்புள்ளது. பின்னர், நாங்கள் (மலேசியா) கல்ஃப் ஏர் (Gulf Air) நிறுவனத்திடம் நேரடி விமானங்களை இயக்குமாறு கோரிக்கை வைப்போம். விமான இணைப்புகளை வழங்குவதில் கவனம் செலுத்துமாறு பட்டத்து இளவரசர் எங்களிடம் கேட்டுக் கொண்டார். அது எம்ஏஎஸ் விமானமாக இருந்தாலும் சரி அல்லது வேறு விமான நிறுவனமாக இருந்தாலும் சரி. இதற்கு நாங்கள் கவனம் செலுத்துகிறோம்,” என்றார் அவர்.
இதனிடையே, பட்டத்து இளவரசருடனான சந்திப்பின்போது தாம் விடுத்த அழைப்பை ஏற்கும் விதமாக இவ்வாண்டு மே மாதத்தில் நடைபெறவிருக்கும் ஆசியான்-வளைகுடா ஒத்துழைப்பு மன்றம், ஜி.சி.சி உச்சநிலை மாநாடு மற்றும் ஆசியான்-ஜி.சி.சி+சீனா உச்சிநிலை மாநாட்டிற்காக கோலாலம்பூருக்கு வருகையளிக்க சல்மான் ஹமாட் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அன்வார் குறிப்பிட்டார்.
Source : Bernama
#PMAnwar
#Bahrain
#DirectFlightBahrain
#MalaysiaBahrain
#AnwarVisitsBahrain
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews
Comments are closed, but trackbacks and pingbacks are open.